ஒரு கிராமம் இரண்டாகப் பிரிந்து கிடக்கிறது.அடிக்கடி மோதல்கள்.அதனால் அந்த மக்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்று நினைக்கும் ஒருவர் திடீரென இறந்து போகிறார்.அவருடைய மரணத்துக்குப் பின் ஓர் அதிசயம் நடக்கிறது.அதை வைத்து அந்த ஒருங்கிணைப்பை சாத்தியப்படுத்த முயல்கிறார் நாயகன்.அவர் நினைத்தது நடந்ததா? இல்லையா?
அர்ஜூன் தாஸ், ஷ்வாத்மிகா ராஜசேகர், நாசர் முதன்மை பாத்திரங்களில் நடிக்க, “சில நேரங்களில் சில மனிதர்கள்” புகழ் விஷால் வெங்கட் இயக்கத்தில், வாழ்வின் வினோதங்களைப் பேசும் கமர்ஷியல் எண்டர்டெய்னர் டிரமாவாக உருவாகியுள்ள படம் “பாம்”. இதில், அர்ஜூன் தாஸ், ஷிவாத்மிகா ராஜசேகர் ஆகியோரோடு, காளி வெங்கட், நாசர், அபிராமி, ரமேஷ் திலக், பால சரவணன் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.













