September 17, 2026
சினிமா செய்திகள்

ஒரு நாளுக்கு ஒரு கோடி – கமல் அதிரடியால் அதிர்ந்த நிறுவனம்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் பாகம் விஜய் தொலைக்காட்சியில், 2017 சூன் 25 அன்று தொடங்கி நூறு நாட்கள் நடந்தது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாம் பாகம், 2018 சூன் 17 முதல் ஒளிபரப்பப்பட்டது.

இவ்விரு நிகழ்ச்சிகளையும் கமல் தொகுத்து வழங்கினார்.

இவ்வாண்டு அந்நிகழ்ச்சியின் மூன்றாம் பாகம் ஒளிபரப்பாகவுள்ளது.

அது மீண்டும் விஜய் தொலைக்காட்சியிலேயே ஒளிபரப்பாகும் என்றும் இம்முறை கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகலாம் என்றும் சொல்லப்பட்டது.

ஆனால் இம்முறையும் விஜய் தொலைக்காட்சியே அந்நிகழ்ச்சியை ஒளிபரப்பவிர்ருக்கிறதாம்.

அதேபோல் கமல்தான் அந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கவிருக்கிறாராம்.

இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகும் நேரத்தில், ஒரு நாளுக்கு ஒரு கோடி வீதம் நூறு கோடி சம்பளம் வேண்டுமென்று கமல் கேட்டாராம்.

இதனால் தொலைக்காட்சி நிறுவனம் அதிர்ந்திருப்பதாகச் சொல்கிறார்கள். கடைசியில் அவர்கள் ஒப்புக்கொள்வார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

இதுகுறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகலாம் என்றும் சொல்கிறார்கள்.

Related Posts