சினிமா செய்திகள்

அஜீத் 63 படத்தைத் தயாரிக்கிறது சன் பிக்சர்ஸ் – கூட்டணி அமைந்தது எப்படி?

வலிமை படத்துக்கு அடுத்தும் எச்.வினோத் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் நடந்துவருகிறது.

அஜீத் 61 என்றழைக்கப்படும் அந்தப்படத்தையும் இந்தித் தயாரிப்பாளர் போனிகபூரே தயாரிக்கிறார்.

இதற்கடுத்து அஜீத்தின் 62 ஆவது படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. விக்னேஷ்சிவன் இயக்குகிறார் என்பதும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அஜீத்தின் 63 ஆவது படம் பற்றிய செய்திகளும் திரையுலகில் உலா வந்துகொண்டிருக்கிறது.

அது என்னவென்றால்?

அஜீத்தின் 63 ஆவது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறதாம். இதற்கான பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது.

இயக்குநர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய பேச்சுகள் நடந்துகொண்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் அஜீத்தை வைத்துப் படம் தயாரிக்க முயன்றதாகவும் அஜீத் மறுப்பு தெரிவித்து வந்ததாகவும் சொல்லப்பட்டது.

இப்போது எப்படி ஒப்புக்கொண்டார்?

விஜய் நூறு கோடி சம்பளம் வாங்கிவிட்டார் என்றதும் என் சம்பளமும் நூறு கோடி என்று கேட்கத் தொடங்கினார் அஜீத்.

ஆனால், அவருடைய படங்களின் வசூல் நிலவரங்களைக் கணக்குப் போட்டுப் பார்த்து அஜீத்துக்கு அவ்வளவு சம்பளம் கொடுத்துப் படமெடுத்தால் நிச்சயம் நட்டம் என்பதுதான் எதார்த்தம்.

இதனால் சில தயாரிப்பு நிறுவனங்கள் அஜீத்தை வைத்துப் படமெடுப்பதைத் தவிர்த்துவிட்டன.

இந்தநேரத்தில்தான், லைகா நிறுவனம் அஜீத்துக்கு நூறு கோடி கொடுக்க முன்வந்தது. அதற்கடுத்து சன் பிக்சர்ஸ் நிறுவனமும் அஜீத்துக்கு நூறு கோடி சம்பளம் கொடுக்க முன்வந்திருக்கிறதாம்.

அதனால் இந்தக் கூட்டணி அமைந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

Related Posts