மீண்டும் வனிதா – பிக்பாஸின் புதிய முடிவு
பிக்பாஸ் 3 நிகழ்ச்சி 20 நாட்களைக் கடந்து விட்டது. முதல் வாரம் வெளியேற்றம் நடக்காத நிலையில், கடந்த வாரம் முதல் ஆளாக பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார் பாத்திமா பாபு. தற்போது இரண்டாவது ஆளாக வனிதா விஜயகுமார் வெளியேறியிருக்கிறார்.
இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வனிதா வெளியேற்றப்படுவதாக கமல் அறிவித்தார். இது போட்டியாளர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.பார்வையாளர்களுக்கும் அதிர்ச்சி.
பிக்பாஸ் குழுவினர் மோகன்வைத்யாவை வெளியேற்ற எண்ணினாலும் வனிதாவை விட அவர் அதிக வாக்குகள் பெற்றதால் தப்பினார்.
இருந்தாலும் பிக்பாஸ் சுவாரசியமாகப் போவதற்கு உதவியாக இருந்தார் வனிதா.
அவர் வெளியேறியதால் பார்வையாளர்களுக்கு ஏமாற்ற உணர்வு வந்திருக்கிறது என்பதை உணர்ந்த பிக்பாஸ் குழு, மீண்டும் வனிதாவை உள்ளே அழைக்க எண்ணியிருக்கிறதாம்.
இம்முறை அவர் விருந்தினராக வருவார். விரைவில் வருவார் என்கிறார்கள்.











