நடிகை ஸ்ரீதேவிக்கு ரஜினிகாந்த் எழுதிய இரங்கல் செய்தி
நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பினால் துபாயில் காலமானார். அவருக்கு வயது 54 இவரது திடீர் மறைவினால் இந்தியத் திரையுலகம் கடும் சோகமும் அதிர்ச்சியும் அடைந்துள்ளது.
சமூகத்தில் பல்வேறு துறைகளில் பிரபலமானவர்கள் ஸ்ரீதேவிக்கு தங்கள் புகழஞ்சலிகளைச் செலுத்தி வருகின்றனர்.
நடிகை ஸ்ரீதேவி மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த், ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்தியில்,
திரையுலகின் உண்மையான நண்பரை இழந்தேன். உண்மையான லெஜண்ட். நான் அதிர்ச்சியும் மனவருத்தமும் அடைந்துள்ளேன். நான் என் உண்மையான தோழியை இழந்தேன், திரைத்துறை உண்மையான் லெஜண்டை இழந்துள்ளது. என் இதயம் அவரது குடும்பத்தினரிடமும், நண்பர்களிடமும் உள்ளது. அவர்களது சோகம் என் சோகம். ஆன்மா சாந்தியடையட்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.











