February 10, 2026
சினிமா செய்திகள்

பரியேறும் பெருமாள் கதிர் நடிக்கும் புதியபடம் – விவரம்

மான் கராத்தே இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கியிருக்கும் “ரெட்ட தல” படத்தில் அருண் விஜய் நாயகனாக நடித்திருக்கிறார். இப்படத்தில் சித்தி இத்னானி அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். இவர்களுடன் தான்யா ரவிச்சந்திரன், ஹரீஷ் பேரடி, யோகேஷ் சாமி, ஜான் விஜய், பாலாஜி முருகதாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

இப்படத்துக்கு ஒளிப்பதிவு – டிஜோ டாமி, படத்தொகுப்பு – ஆண்டனி, சண்டைப் பயிற்சி – பிசி ஸ்டண்ட்ஸ்,கலை இயக்கம் – அருண்சங்கர் துரை,உடை வடிவமைப்பு – கிருத்திகா சேகர்

பிடிஜி யுனிவர்சல் நிறுவனம் சார்பில் பாபி பாலச்சந்திரன், அருண் விஜய் திரை வாழ்க்கையில் இதுவரை இல்லாத வகையில் மிகப்பிரம்மாண்ட படைப்பாகத் தயாரித்திருக்கும் இப்படம் டிசம்பர் 18 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிறுவனம் அடுத்து ஜெயம்ரவியைக் கதாநாயகனாக வைத்து இரண்டு படங்களைத் தயாரிக்கத் திட்டமிட்டு முன் தொகை கொடுத்திருந்தது.அது சரியாக வராமல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கும் நிலைக்குச் சென்றுவிட்டது.

ஜெயம்ரவியை நடிக்கக் கேட்டபோது, புது இயக்குநர் அருள் சக்தி முருகன் என்பவர் அந்தப்படத்தை இயக்குவதாக இருந்தது.இவர் இயக்குநர் ஷங்கரிடம் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அது நடக்காமல் போனது.

அதன்பின் அதே கதையை அருண்விஜய்யை கதாநாயகனாக வைத்து அவர் இயக்குவதாகத் திட்டமிடப்பட்டு வேலைகள் நடந்தன.

ஒருகட்டத்தில் அதுவும் சரிவராமல் போனது.

இந்நிலையில் இப்போது புதுஇயக்குநர் இயக்கத்தில் புதிய படமொன்றைத் தயாரிக்கத் திட்டமிட்டு வேலைகளைத் தொடங்கியிருக்கிறார்கள்.

இந்தப்படத்தில் கதாநாயகனாக நடிக்க பரியேறும் பெருமாள் கதிரை ஒப்பந்தம் செய்திருக்கிறார்களாம்.இப்போது அவர் வெற்றிமாறன் தயாரிப்பில் ஒருபடத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.அந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இலங்கையில் நடந்து கொண்டிருக்கிறது.

அது நிறைவடைந்ததும் இந்தப்படத்தில் நடிப்பார் என்று சொல்கிறார்கள்.இப்போது அதன் முன்தயாரிப்புப் பணிகள் தொடங்கியிருக்கின்றன என்றும், ரெட்டதல படத்தின் வெளியீட்டுக்குப் பிறகு இந்தப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று சொல்கிறார்கள்.

நல்லபடியாக நடக்கட்டும்.

Related Posts