சினிமா செய்திகள்

காஞ்சனா இந்தி ரீமேக் பட வெளியீடு குறித்த அறிவிப்பு

கொரோனா அச்சுறுத்தலால் இந்தியா முழுவதுமே பொதுமக்கள் கூடும் இடங்கள் அனைத்துமே கடந்த 3 மாதங்களாக மூடப்பட்டுள்ளன. இதில் திரையரங்குகளும் அடங்கும். எப்போது மீண்டும் திறக்கப்படும் என்பது இதுவரை உறுதியாகவில்லை.

இதனால் திரைப்படங்களை நேரடியாக இணைய தளத்தில் வெளியிட பலர் முடிவு செய்துள்ளனர். இந்தியில் அமிதாப் பச்சன், ஆயுஷ்மான் குரானா நடித்துள்ள ‘குலாபோ சிதாபோ’ திரைப்படம் ஏற்கெனவே வெளியாகிவிட்டது. மேலும், வித்யாபாலனின் ‘ஷகுந்தலா தேவி’ படமும் வெளியாகவுள்ளது.

இதனிடையே, 7 இந்திப் படங்களின் உரிமையைக் கைப்பற்றி டிஜிட்டல் வெளியீட்டை உறுதி செய்திருக்கிறது டிஸ்னி நிறுவனம். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை ஜூன் 29 அன்று அறிவித்தது.

அதன்படி, டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஜூலை மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை வெளியாகவுள்ள 7 படங்களின் பட்டியல்…..

லக்‌ஷ்மி பாம் (காஞ்சனா ரீமேக்) – அக்‌ஷய் குமார் நாயகன், கியாரா அத்வானி நாயகி, ராகவா லாரன்ஸ் இயக்கம்.

பூஜ்: தி ப்ரைட் ஆஃப் இந்தியா (1971 இந்தியா – பாக் யுத்தம் பற்றிய படம்) – அஜய் தேவ்கன் நாயகன், உடன் சஞ்சய் தத், சோனாக்‌ஷி, அபிஷேக் துதைய்யா இயக்கம்.

சடக் 2 (1991-ல் வந்த படத்தின் இரண்டாம் பாகம்) – பூஜா பட், சஞ்சய் தத், ஆலியா பட், ஆதித்யா ராய் கபூர், மஹேஷ் பட் இயக்கம்.

தில் பெசாரா (fault in our stars நாவலின் / ஹாலிவுட் படத்தின் ரீமேக்) – சுஷாந்த் சிங் ராஜ்புத் நாயகன், சஞ்சனா சங்கி நாயகி, முகேஷ் சாப்ரா இயக்கம். ரஹ்மான் இசை.

பிக் புல் – அபிஷேக் பச்சன் நாயகன், இலியானா, நிகிதா தத் – அஜய் தேவ்கன் இணைந்து தயாரிக்கும் படம். கூகி குலாடி இயக்கம்.

லூட்கேஸ் – குணால் கெம்மு நாயகன், உடன் கஜ்ராஜ் ராவ், ரசிகா துக்கால், ரன்வீர் ஷோரே, விஜய் ராஸ். ராஜேஷ் கிருஷ்ணன் இயக்கம். ஃபாக்ஸ் ஸ்டார் தயாரிப்பு.

குதா ஹாஃபிஸ் – வித்யுத் ஜம்வால், ஷிவலேகா ஓபராய். ஃபரூக் கபீர் இயக்கம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts