சினிமா செய்திகள்

மாறியது கூட்டணி – லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்

நடிகர் கமலின் தீவிர ரசிகர் இயக்குநர் லோகேஷ்கனகராஜ்.அவர் இயக்கிய முதல்படம் மாநகரம். அதற்கடுத்து கார்த்தியை வைத்து அவர் இயக்கிய கைதி படம் கமலின் விருமாண்டி படம் கொடுத்த உத்வேகத்தால் உருவானது என்றார். இப்போது விஜய், விஜய்சேதுபதி உள்ளிட்ட பலர் நடிக்கும் மாஸ்டர் படத்தை இயக்கியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.இந்தப்படம் கமலின் நம்மவர் படத்தின் மறு ஆக்கம் என்றும் சொல்லாமெனும் அளவுக்கு இருக்கிறதாம்.

இதனால், மாஸ்டர் படத்தை அடுத்து இவர் ரஜினி நடிக்கும் புதிய படமொன்றை இயக்கவிருக்கிறார் என்றும் அப்படத்தை கமல்ஹாசன் தயாரிக்கவிருக்கிறார் என்றும் செய்திகள் வந்தன.

ரஜினிக்கு ஒரு கதையை லோகேஷ் கனகராஜ் சொல்லியிருக்கிறார். அந்தக்கதையில் ரஜினிக்கு முழுத் திருப்தி இல்லையாம். வியாபார அம்சங்களோடு கலந்த மாஸ் படம் நடிக்கவேண்டும் என்கிற ரஜினியின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்கிற கதையாக அது இல்லையாம்.இன்னொரு ரஞ்சித் படம் போல் ஆகிவிடக்கூடாது என்று நினைத்த ரஜினி அந்தக்கதையை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டார் என்று சொல்லப்பட்டது.

அதனால், கலங்கி நின்ற லோகேஷ் கனகராஜுக்கு மகிழ்ச்சியளிக்கும் செய்தியைக் கமல் சொல்லியிருக்கிறாராம்.இந்தக் கதையில் நானே நடிக்கிறேன் என்பதுதான் அந்த மகிழ்ச்சியளிக்கும் செய்தி.

இதனால் உற்சாகமான லோகேஷ் கனகராஜ், அதற்கான திரைக்கதை எழுதும் பணியில் ஈடுபட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

Related Posts