கதாநாயகனாகிறார் இன்னொரு வாரிசு
பல ஆண்டுகளாக நடித்துக் கொண்டிருந்தாலும் கார்த்தி நடித்த கைதி படத்தின் மூலம் பெரும்புகழ் பெற்றவர் நடிகர் ஜார்ஜ். அவருடைய மகன் பிரிட்டோ இப்போது கதாநாயகனாக நடிக்கிறார்.
தூங்கா கண்கள் என்கிற படத்தை கோல்டன் ஸ்டார் சினிமாஸ் மற்றும் வெற்றி பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.இந்தப்படத்துக்குக் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் த,வினு.
இப்படம் பற்றி அவர் கூறியதாவது…
70 வருடங்களுக்கு முன் திருவாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியிருக்கிறது. இந்தத் திரைப்படத்தில் இதுவரை தமிழ் சினிமா பார்க்காத ஒரு விஷயம் சொல்லப்பட்டிருக்கிறது. தென் தமிழகத்தில் “வாதை” என்று அழைப்பார்கள். இந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து சஸ்பென்ஸ், திரில்லர், ஹாரர் கலந்து உருவாக்கியிருக்கிறோம்.
இந்தப் படத்தில் ஜார்ஜ் மகன் பிரிட்டோ அறிமுகமாகிறார். “கைதி” புகழ் ஜார்ஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். களவாணி துரை சுதாகர், நிக்கேஷ், த.வினு, ஹாலோ கந்தசாமி, காஞ்சனா ரமேஷ், டாக்டர் பிரபு ஆகியோருடன் அப்ஷரா, ரேஷ்மா கேரளா புதுவரவுகள் நாயகிகளாக அறிமுகமாகிறார்கள்.
செங்கோட்டை, நாகர்கோவில், சென்னை மற்றும் கேரளா ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நிறைவு பெற்றது.
இப்படத்துக்கு ஒளிப்பதிவு: இமயவன்,இசை: இளங்கோ கலைவாணன்,
பாடல்கள்: நிமேஷ், படத்தொகுப்பு: ஏ.எல்.ரமேஷ், சண்டைப்பயிற்சி: திரில்லர் முமேஷ்
இவ்வாறு அவர் கூறினார்.
ஏற்கெனவே பல வாரிசு நடிகர்கள் திரையுலகில் வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வரிசையில் பிரிட்டோவும் சேரட்டும்.










