சினிமா செய்திகள்

நடிகை திரிஷாவுக்கு மிரட்டல்

திருஞானம் இயக்கத்தில் திரிஷா,விஜய்வர்மா,சங்கீதா, சிறுமி மானஸ்வி உட்பட பலர் நடித்த படம் ‘பரமபதம் விளையாட்டு’.இந்தப்படத்துக்கு ஒளிப்பதிவு ஜேடி,இசை அம்ரீஷ்.

இப்படத்தின் விளம்பர விழா இன்று நடந்தது. அதற்கு திரிஷா வரவில்லை.

அதனால் விழாவில் கலந்து கொண்ட சிம்புவின் மாநாடு பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசும்போது…..,

15 நாட்களுக்கு முன்பு இப்படத்தை பார்க்கும்படி என்னை இயக்குநர் திருஞானம் அழைத்திருந்தார். படம் பார்க்கும் போது 20 படங்கள் இயக்கிய அனுபவம் தெரிந்தது. அவரிடம் இதை எதிர்பார்க்கவில்லை. புதுமுகம் விஜய்வர்மாவிற்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறது. சிறுமி மானஸ்வி நன்றாக நடித்திருக்கிறார். அவர் நகைச்சுவை நடிகர் கொட்டாச்சியின் மகள் என்று பிறகுதான் தெரிந்தது. அம்ரீஷின் இசை சிறப்பாக இருக்கிறது.

தான் நடிக்கும் படத்தின் விளம்பரத்திற்கு ஏன் நடிகர், நடிகைகள் வரமால் இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. பெரிய நாயகர்கள் ரஜினிகாந்த், விஜய், கமலஹாசன் போன்றோர்களே தாங்கள் நடிக்கும் படங்களின் விழாக்களுக்கு வரும்போது இவர்கள் ஏன் வராமல் இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. மேலும், உங்களைப் போன்றோர்களை வைத்து படம் எடுத்தால் தான் விளம்பரமாகும் என்று எடுக்கிறோம். இல்லையென்றால், புதுமுகங்களை வைத்தே எடுத்து விடுவோமே என்றார்.

தயாரிப்பாளர் டி.சிவா பேசும்போது….,

நான் இன்னும் படம் பார்க்கவில்லை. ஆனால், படம் பார்த்த என் நண்பர்கள் சிறப்பாக இருக்கிறது என்று கூறினார்கள். பெரிய நாயகன் இல்லாமல், விளம்பர நோக்கோடும் இல்லாமல், ஆனால், நட்சத்திர அந்தஸ்த்தோடு இப்படத்தை இயக்கியிருக்கிறார் திருஞானம்.

இப்படிப்பட்ட படத்தின் விளம்பரத்திற்கு திரிஷா வரவில்லையென்பது வருத்தத்திற்குரிய விஷயம். தொடர்ந்து அவர் விளம்பரத்துக்கு ஒத்துழைப்பு கொடுக்காவிட்டால் சம்பளத்தில் இருந்து ஒரு பகுதியை தயாரிப்பாளருக்கு திருப்பித்தர வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பாக எச்சரிக்கை விடுக்கிறேன் என்றார்.

Related Posts