சினிமா செய்திகள்

கைமாறுகிறது இந்தியன் 2 – கமல் ஒப்புக்கொள்வாரா?

ஷங்கர் இயக்கத்தில் கமல், காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் இந்தியன் 2.லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் 2018 ஆம் ஆண்டே தொடங்குவதாகச் சொல்லப்பட்டது. பல்வேறு தடைகள் காரணமாக 2019 ஆம் ஆண்டு படப்பிடிப்பு தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வந்தது.

2020 பிப்ரவரி 19 ஆம் தேதி இந்தியன் 2 படப்பிடிப்புத் தளத்தில் நடந்த கொடூர விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர்.அதனால் அப்படத்தின் படப்பிடிப்பு தடைபட்டது.

அதன்பின் படப்பிடிப்பு நடக்கவில்லை. மார்ச் 25 முதல் கொரோனா காரணமாக ஊரடங்கு தொடங்கிவிட்டதால் எல்லா வேலைகளும் அப்படியே நின்றுவிட்டன.

இந்நிலையில், இப்போது இப்படம் பற்றிய செய்தியொன்று திரையுலகினர் மத்தியில் உலா வந்து கொண்டிருக்கிறது.

அது என்னவென்றால், இப்படத்தைத் தயாரிப்பதிலிருந்து விலகிக் கொள்ள லைகா நிறுவனம் முன்வந்திருக்கிறதாம்.

இந்தநிலையில் இப்படியே படத்தைக் கொடுத்துவிட அந்நிறுவனம் தயாராக இருக்கிறது என்பதால் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை எடுத்துக் கொள்ள முன்வந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இதுவரையிலான செலவுகள் தொடர்பான பேச்சுகள் நடந்துகொண்டிருக்கிறதாம். பேச்சுவார்த்தையில் எல்லா விசயங்களும் சரியாக அமைந்தால் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்புப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் என்று சொல்லப்படுகிறது.

அதேசமயம்,இதுவரை சன் பிக்சர்ஸ் படங்களில் நடிக்காத கமல் இப்போது அந்நிறுவனம் பொறுப்பேற்பதை ஒப்புக்கொள்வாரா? என்கிற ஐயமும் எழுந்திருக்கிறதாம்.

சன் பிக்சர்ஸ் பொறுப்பேற்குமா? லைகாவே தொடருமா? என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும் என்கிறார்கள்.

Related Posts