தொடங்கியது தர்பார் வியாபாரம் – ஆரம்பமே அதிர்ச்சி
ஏ,ஆர்,முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா,யோகிபாபு உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் தர்பார். இந்தப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்திருக்கிறது.
இப்படம் 2020 பொங்கல் நாளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் இப்படத்தின் வியாபாரம் அண்மையில் தொடங்கியிருக்கிறது.
தொடங்கும்போதே படநிறுவனத்துக்கு அதிர்ச்சி காத்திருந்ததாம்.
ஆம், இப்படத்தின் கர்நாடக உரிமைக்கென ஒரு விலையை தயாரிப்பு நிறுவனம் சொல்லியிருக்கிறது. அந்த விலையைக் கேட்டதும் முதலில் படத்தைக் கேட்டுக் கொண்டிருந்த கர்நாடக விநியோகஸ்தர்கள் சிலர், எங்களுக்குப் படமே வேண்டாம் என்று சொல்லிவிட்டார்களாம்.
கர்நாடகத்தில் ரஜினி படத்துக்கு வரவேற்பு இருக்குமே, அப்ப்டி இருக்கும் போது ரஜினி படத்தை வாங்கத் தயங்குவது ஏன் என்றால்?
கர்நாடகத்தைப் பொறுத்தவரை கன்னடப் படங்களுக்கு அடுத்து தெலுங்கு மற்றும் இந்திப்ப்டங்களுக்கு முன்னுரிமை இருக்கும் அதற்கடுத்த நிலையில்தான் தமிழ்ப்படங்கள் இருக்கின்றன.
2020 பொங்கல் நாளில் ஒரு பெரிய கன்னடப்படம் மற்றும் மகேஷ்பாபு அல்லுஅர்ஜுன் ஆகியோருடைய படங்கள் வெளியாகவிருக்கின்றன.
அந்நேரத்தில் இவ்வளவு பெரிய விலைக்கு வாங்கி வெளியிட்டால் நிச்சயம் நட்டம் ஏற்படும், ஏற்கெனவே பேட்ட படம் வெளியிட்டவர் 4 கோடி நட்டத்தைச் சந்தித்து இருக்கிறார். அதனால் தர்பார் படத்தை வாங்க முன்னணி விநியோகஸ்தர்கள் தயங்குகிறார்கள் என்று சொல்லப்படுகிறது.










