சினிமா செய்திகள்

ரஜினியுடன் இணைகிறார் ராஜமெளலி – தயாராகிறது இந்திய சினிமா

பாகுபலி வெளியானதிலிருந்தே அரசல் புரசலாகப் பேசப்பட்டுக் கொண்டிருந்த ஒரு விசயம் இப்போது நடைமுறைக்கு வரவிருக்கிறது என்கிறார்கள்.

ஆம், அப்போதிருந்தே பாகுபலி இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருக்கிறார் என்று சொல்லப்பட்டு வந்தது.

அது இப்போது உறுதியாகிவிட்டதாம்.

சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் முடிவடைந்ததும் ராஜமெளலி இயக்கும் படத்தைத் தொடங்கத் திட்டமிட்டிருக்கிறார்களாம்.

அதற்குள் ராஜமெளலி தற்போது இயக்கிக் கொண்டிருக்கும்
படமும் வெளியாகிவிடுமாம்.

2020 மத்தியில் தொடங்கும் அந்தப்படம் 2021 இல் நடக்கவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக வெளியாகும் என்று சொல்கிறார்கள்.

அதற்கான தொடக்கக் கட்ட வேலைகள் இப்போதே தொடங்கிவிட்டன என்றும் சொல்லப்படுகிறது.

இது தமிழ், தெலுங்கு மட்டுமின்றி ஒட்டு மொத்த இந்தியாவுக்கான படமாக இருக்கும் என்றும் சொல்கிறார்கள்.

Related Posts