சினிமா செய்திகள்

காப்பான் ரிலீஸ் தேதி அறிவிப்பு – சூர்யா ரசிகர்கள் கொண்டாட்டம்

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா,சாயிஷா, ஆர்யா, மோகன்லால் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் “காப்பான்”. ஹாரிஸ்ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசை வெளியிட்டு விழா சென்னை திருவான்மியூரில் ஜூலை 21 ஆம் தேதி நடைபெற்றது.

இப்படத்தில் நடிகர் மோகன்லால் பிரதமராக நடிக்கிறார்.அவருடைய பாதுகாப்பு அதிகாரியாக சூர்யா நடிக்கிறார்.

இலண்டன் உட்பட வெளிநாடுகளிலும் இந்தியாவின் பல பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது.

மிகவும் எதிர்பார்புக்குரிய இந்தப்படத்தின் வெளியீட்டுத் தேதியை இன்று அறிவித்துள்ளனர்.

அதன்படி இப்படம் செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருக்கிறார்கள். இதை சூர்யா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Related Posts