தர்பார் அப்டேட் ரஜினி ரசிகர்கள் ஏமாற்றம் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சி
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் தர்பார்.இந்தப்படத்தின் வேலைகள் வேகமாக நடந்துகொண்டிருக்கின்றன.
இந்நிலையில் இந்தப்படம் பற்றிய புதியதகவல் இன்று மாலை ஆறு மணிக்கு வெளியிடப்படும் என்று இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் காலையில் கூறியிருந்தார்.
அதனால் ரஜினி ரசிகர்கள் மிகவும் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.
அதேநேரம் அஜித் நடித்துள்ள நேர்கொண்டபார்வை படத்தில் இடம்பெறும் அகலாதே என்கிற பாடலும் ஆறு மணிக்கு வெளியிடப்படும் என்கிற அறிவிப்பும் இருந்தது.
அஜீத் படத்தின் பாடல் என்று ஏற்கெனவே சொல்லிவிட்டார்கள், ரஜினி படத்தில் என்ன? என்பது தெரியாமல் இருந்தது.
இதனால் இரண்டு நடிகர்களின் ரசிகர்களும் மிகவும் ஆவலாகக் காத்திருந்தது தர்பார் படத்தின் தகவலுக்காகத்தான்.
ஆறு மணிக்கு, ரஜினியின் புகைப்படங்கள் 7 மணிக்கு வெளியிடப்படும் என்று ஏ.ஆர்.முருகதாஸ் அறிவித்தார்.
அதிலேயே பல ரஜினி ரசிகர்கள் இதுதானா? என்று சோர்ந்துவிட்டார்கள். அஜீத் ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர்.புகைப்படங்களை வைத்துக் கொண்டு நம்மை முந்திச் சென்றுவிடமுடியாது என்பது அவர்களுடைய நம்பிக்கை.
7 மணிக்கு ரஜினியின் இரண்டு புகைப்படங்கள் வெளியிடப்பட்டன. அவற்றைப் பார்த்த ரஜினி ரசிகர்கள் இன்னும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Darbar 5
ஏனெனில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட படங்களைவிட திருட்டுத்தனமாக வெளியான புகைப்படங்களே இதைவிடச் சிறப்பாக இருந்தன என்பது அவர்களுடைய கருத்து.
இன்னொருபக்கம் அஜீத் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஏனெனில் சமூக வலைதளங்களில் அஜீத் முன்னிலையிலேயே இருக்கிறார் என்பதுதான்.











