September 21, 2026
செய்திக் குறிப்புகள்

கழுகு 2 பட வியாபாரத்தில் நடந்த ஆச்சரியம்

கிருஷ்ணா,பிந்து மாதவி நடிப்பில் சத்யசிவா இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘கழுகு’.

ஏழு வருடங்களுக்குப் பிறகு அந்தப் படத்தின் இரண்டாம் பாகம் இதே கூட்டணியில் உருவாகியுள்ளது.கழுகு 2 என்றே பெயரிடப்பட்டுள்ள இந்தப்படத்தை மதுக்கூர் மூவி மேக்கர்ஸ் சார்பில் சிங்காரவேலன் தயாரித்துள்ளார்.

கழுகு படத்தில் கொடைக்கானல் மலைப்பகுதியில் தற்கொலை செய்து கொள்பவர்களின் பிணங்களை, உயிரைப் பணயம் வைத்து மீட்டெடுக்கும் தொழிலாளி கதாபாத்திரத்தில் நடித்த கிருஷ்ணா, கழுகு 2 படத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் மக்களுக்கு இடையூறு செய்யும் ஆபத்தான மிருகங்களை வேட்டையாடும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் காளிவெங்கட் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, ராஜா பட்டாசார்ஜி ஒளிப்பதிவு செய்ய, கோபிகிருஷ்ணா படத்தொகுப்பைக் கவனிக்கிறார்.

இந்தப்படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டைன்மென்ட் நிறுவனம் வெளியிடுகிறது.ஆகஸ்ட்-1 ஆம் தேதி இந்த படம் ரிலீசாக இருக்கிறது.

எனவே, இந்தப் படத்தின் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று இரவு இந்தத் திரைப்படம் விநியோகஸ்தர்களுக்குத் திரையிட்டுக் காட்டப்பட்டது.

திரைப்படத்தைப் பார்த்த விநியோகஸ்தர்கள், யாருமே எதிர்பாராத விதமாக அமைக்கப்பட்டுள்ள கிளைமாக்ஸை பார்த்து கண்கலங்கினார்கள். இதில் உணர்ச்சிவசப்பட்ட கோவை விநியோகஸ்தர் சிதம்பரம், கோவை ஏரியா வெளியீட்டு உரிமையை அவுட் ரேட் முறையில் வாங்கியுள்ளார்.

இக்காலத்தில் ஒரு படம் அவுட்ரேட் முறையில் விற்பனையாவது பெரிய ஆச்சரியம் என்று பலரும் சொல்கிறார்கள்.

Related Posts