பிகில் பட விநியோகம் – மீண்டும் களமிறங்கிய ஜாஸ் சினிமாஸ்
சசிகலா குடும்பத்தைச் சேர்ந்தவர்களால் நிர்வகிக்கப்படும் நிறுவனம் ஜாஸ் சினிமாஸ்.
இந்நிறுவனம் பல திரையரங்குகளை நடத்துவதோடு திரைப்பட விநியோகமும் செய்துவருகிறது.
பல பெரிய படங்களை விநியோகம் செய்திருக்கும் அந்நிறுவனம் அண்மைக் காலத்தில் திரைப்பட விநியோகத்தில் தீவிரமாக் ஈடுபடாமல் ஒதுங்கியிருந்தது.
அவ்வப்போது ஏதாவதொரு சிறு படத்தை ஏதாவது ஒரு பகுதியில் விநியோகம் செய்துவந்தது.
இந்நிலையில் விஜய் நடிக்கும் பிகில் படத்தின் மூலம் மீண்டும் விநியோகத் துறையில் இறங்கியிருக்கிறது.
பிகில் படத்தின் சென்னை நகர விநியோக உரிமையை அந்த நிறுவனம் பெற்றிருப்பதாகச் சொல்லப்படுகிறது. சென்னை நகர் உரிமை சுமார் எட்டு கோடி என்றும் சொல்லப்படுகிறது.











