சினிமா செய்திகள்

விஷால் மீது பாலியல் குற்றச்சாட்டு – தேர்தல் நேர பரபரப்பு

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி. இவர் தெலுங்குத் திரையுலகில் நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை முன் வைத்திருந்தார்.

இது மட்டுமின்றி தமிழ்த் திரையுலகில் இயக்குநர் முருகதாஸ், சுந்தர்.சி, ராகவா லாரன்ஸ் பற்றியும் தனது முகநூல் பக்கத்தில் குற்றச்சாட்டுக்களை முன் வைத்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்த நிலையில் தற்போது நடிகர் விஷால் குறித்தும் தனது முகநூல் தளத்தில்,நீங்கள் பல பெண்களை ஏமாற்றியிருக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியும். உங்களுக்கு உண்மையாகவே தைரியம் இருந்தால் எந்த பெண்ணையும் ஏமாற்றவில்லை என்பதை நிரூபியுங்கள்.

விஷாலுக்கு யாரெல்லாம் வாக்களிக்கப் போகிறீர்கள் ஒன்றைப்புரிந்து கொள்ளுங்கள் அவர் மிகப்பெரிய ஏமாற்றுவாதி என் அம்மாவின் மீதும் எனது தொழில் மீதும் நான் சத்தியம் செய்து சொல்கிறேன் நீங்கள் என் வாழ்க்கையை அழித்தாலும் சரி அல்லது என்னை கொன்றாலும் சரி இப்போதும் நான் சொல்லுவேன் விஷால் ஒரு ஏமாற்றுவாதிதான்.

நீங்கள் பணம் கொடுத்து உறவு வைத்துக் கொள்கிறீர்கள் என்பது தெரியும். உங்களுக்கு யார் பெண்களை சப்ளை செய்கிறார்கள் என்பதும் தெரியும் உங்கள் குடும்பத்தின் மீது ஆணை செய்து சொல்லுங்கள் நீங்கள் எந்த பெண்ணின் வாழ்க்கையில் நாசம் செய்யவில்லையா உங்களால் பாதிக்கப்பட்ட நபர்களில் சாரதி பாபா அவர்களின் மகளும் ஒருவர் உங்களால் பாதிக்கப்பட்ட மேலும் 3 பேரை எனக்குத் தெரியும் என்று சொல்லி பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறார்.

நடிகர் சங்கத் தேர்தல் நேரத்தில் ஶ்ரீரெடடி இவ்வாறு பேசியிருப்பது பெரும் சர்ச்சையை உண்டாக்கியிருக்கிறது.

Related Posts