செய்திக் குறிப்புகள்

முந்தைய படங்களை விட மிரட்டலாக இருக்கும் – காஞ்சனா 3 படக்குழு உறுதி

சன் பிக்சரஸ் வழங்க ராகவேந்திரா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் படம் முனி 4 காஞ்சனா 3.

கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி கதாநாயகனாக நடிக்கிறார் ராகவா லாரன்ஸ்.

கதாநாயகிகளாக வேதிகா, ஓவியா, நிக்கி தம்போடி நடிக்கிறார்கள்.

மற்றும் சூரி, கோவை சரளா ஸ்ரீமன், தேவதர்ஷினி, டெல்லி கணேஷ், சம்பத்ராம், அனுபமாகுமார், ஆர்.என்.ஆர்.மனோகர், இவர்களுடன் வில்லன்களாக தருண் அரோரா, கபீர்சிங், அஜய்கோஷ் ஆகியோர் நடிக்கிறார்கள்.

இப்படத்துக்கு ஒளிப்பதிவு வெற்றி பழனிச்சாமி, சர்வேஷ் முராரி ஆகிய இருவர்.

இசை டூபாடு,பின்னணி இசை எஸ்.தமன்,படத்தொகுப்பு ரூபன்,
கலை ஆர்.ஜனார்த்தன்,சண்டைப் பயிற்சி சூப்பர் சுப்பராயன்,நடனம் ராகவா லாரன்ஸ்,பாடல்கள் விவேகா, மதன்கார்க்கி, சரவெடி சரவணன்.

இப்படம் பற்றி படக்குழுவினர் கூறியதாவது….

இதற்கு முன்பு வந்த முனி காஞ்சனா 1, 2, படங்களை விட இது இன்னும் மிரட்டலான படமாக உருவாகி இருக்கிறது. பிரமாண்டமாகவும் பிரமிப்பாகவும் இருக்கும்.

இந்தக் கோடையைக் கொண்டாட குடும்பப் படமாக முனி 4 காஞ்சனா 3 இருக்கும் என்று நிச்சயமாகச் சொல்லலாம். காமெடியையும் கமர்ஷியலையும் சரி சம கலவையாக கலந்து தந்திருக்கிறார் லாரன்ஸ்

இவ்வாறு கூறுகின்றனர்.

Related Posts