சினிமா செய்திகள்

ஆர்யா சாயிஷா திருமணம் – சூர்யா கார்த்தி வாழ்த்து

நடிகர் ஆர்யா 2005 ஆம் ஆண்டு வெளியான உள்ளம் கேட்குமே படத்தில் அறிமுகமானார்.அறிந்தும் அறியாமலும், பட்டியல், நான் கடவுள், மதராசபட்டணம், வேட்டை, ராஜா ராணி, இரண்டாம் உலகம், கடம்பன், கஜினிகாந்த் என்று பல படங்களில் நடித்துள்ளார். அவருக்கு 38 வயது ஆகிறது.

இந்த நிலையில் கஜினிகாந்த் படத்தில் இணைந்து நடித்தபோது ஆர்யாவுக்கும், நடிகை சாயி‌ஷாவுக்கும் காதல் மலர்ந்தது.

சாயி‌ஷா தமிழில் வனமகன், கடைக்குட்டி சிங்கம், ஜூங்கா, கஜினிகாந்த் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

2019 பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினத்தன்று, சாயிஷாவை திருமணம் செய்து கொள்ளப்போவதாக நடிகர் ஆர்யா ட்விட்டரில் பதிவிட்டார்.

திருமணத்தை முன்னிட்டு மார்ச் 8 ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்தி நடிகர்-நடிகைகள் பலர் பங்கேற்று, மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இந்நிலையில் மார்ச் 10 ஆம் தேதி காலை ஐதராபாத்தில் ஆர்யா-சாயிஷா திருமணம் நடைபெற்றது. சூர்யா, கார்த்தி ஆகியோர் நேரில் கலந்து வாழ்த்தினர்.

முன்னதாக மார்ச் 9 இரவு நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் இந்தி நடிகர்-நடிகைகள் மற்றும் சுனில் கவாஸ்கர் உள்ளிட்ட கிரிக்கெட் பிரபலங்களும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Related Posts