செய்திக் குறிப்புகள்

பரத் படங்களில் இதுவே முதன்முறை – இயக்குநர் வடிவுடையான் பெருமிதம்

வடிவுடையான் கதை திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் படம் பொட்டு. இந்தப் படத்தில் பரத் நாயகனாக நடிக்கிறார். நாயகிகளாக நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே ஆகியோர் நடிக்கிறார்கள்.

இவர்களோடு தம்பி ராமய்யா, பரணி, நான்கடவுள் ராஜேந்திரன், ஊர்வசி, நிகேஷ்ராம், ஷாயாஜிஷிண்டே, மன்சூரலிகான், ஆர்யன், சாமிநாதன், பாவாலட்சுமணன், பயில்வான் ரங்கநாதன் ஆகியோர் நடிக்கிறார்கள்.

இந்தப்படத்துக்கு வசனம் செந்தில்,ஒளிப்பதிவு இனியன் ஹரீஷ்,
இசை அம்ரீஷ்,பாடல்கள் விவேகா, கருணாகரன்,சொற்கோ, ஏக்நாத்,சண்டைப் பயிற்சி சூப்பர் சுப்பராயன், படத்தொகுப்பு எலீசா

ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் ஆகிய இருவரும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இப்படம் குறித்து இயக்குநர் வடிவுடையான் கூறியதாவது….

பரத் நடித்த படங்களிலேயே இந்தப் படம் தான் முதன் முறையாக 1000 தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது. அதுவும் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியாகிறது. கேரளா, கர்நாடகா போன்ற இடங்களில் நேரடியாக தமிழ் ரிலீஸ் செய்கிறோம்.

மருத்துவக் கல்லூரி பின்னணியில் உருவாகியுள்ள படு பயங்கரமான ஹாரர் படம் இது. இந்தப் படத்தில் பரத் பெண் வேடத்தில் நடித்துள்ளார், அதற்காக அவர் தனது உடல் மொழிகளை மாற்றி அந்தக் கதாபாத்திரமாக மாறி சிறப்பாக நடித்துள்ளார். படம் குழந்தைகள் முதல் அனைவரும் குடும்பத்துடன் பார்த்து ரசிக்கலாம் என்கிறார் இயக்குநர் வடிவுடையான்.

இப்படம் மார்ச் 8 ஆம் தேதி வெளியாகிறது.

Related Posts