சினிமா செய்திகள் நடிகர்

விஜய் 63 படத்தில் அருண்விஜய்?

விஜய், நயன்தாரா, கதிர், விவேக், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கும் விஜய் 63 படப்பிடிப்பு தற்போது நடந்துவருகிறது.

ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய, முத்துராஜ் கலைப் பணிகளை மேற்கொள்கிறார்.

விளையாட்டுத் துறையில் நடக்கும் ஊழல்கள், சாதி ரீதியிலான பாரபட்சம் போன்றவைகளை மையப்படுத்தி இப்படம் உருவாவதாகச் சொல்லப்படுகிறது.

இப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் அருண்விஜய் நடிக்கவிருக்கிறார் என்று ஒரு தகவல் உலவிக்கொண்டிருக்கிறது.

தொலைக்காட்சிப் பேட்டியொன்றில் அருண்விஜய்யிடம் இதைக் கேட்டார்கள். அதற்கு அவர், நானும் கேள்விப்பட்டேன், இதுவரை அப்படி ஒரு அழைப்பு எனக்கு வரவில்லை, அழைப்பு வந்தால், எனக்குப் பொருத்தமான வேடமாக இருந்தால் நிச்சயம் நடிப்பேன் என்று பதில் கூறினார்.

Related Posts