சினிமா செய்திகள்

ரஜினி அஜீத் பேனர் விவகாரம் – சிம்பு ரசிகர் கைது

சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு நடித்த, வந்தா ராஜாவாதான் வருவேன் படம் நேற்று முன்தினம் வெளியானது.

இந்தப் படத்துக்காக டிஜிட்டல் பேனர் வைப்பதற்காக ராணிப்பேட்டையிலுள்ள டிஜிட்டல் பேனர் பிரின்டிங் செய்யும் கடையில் வேலூர் மாவட்ட சிம்பு ரசிகர்மன்ற தலைவர் மச்சிமதன் இருதினங்களுக்கு முன்பு கேட்டுள்ளார். அவர்கள் மறுத்துள்ளனர்.

இதனால், ஆத்திரமடைந்த மச்சி மதன் அங்கிருந்தவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதை தனது நண்பர்கள் மூலம் வீடியோவாக பதிவேற்றம் செய்துள்ளார்.

பின்னர், சிம்புவின் புதிய படம் வெளியாகும் நேரத்தில் திரையரங்கில் உள்ள ரஜினி மற்றும் அஜீத் படங்களின் பேனர்களை கிழிப்பேன் என்ற வீடியோவை பதிவு செய்து யூடியூப்பில் பதிவேற்றியதாக கூறப்படுகிறது. அந்த வீடியோவில் ஆபாசமாகவும் அவர் பேசியுள்ளார்.

இது தொடர்பாக ராணிப்பேட்டை காவல்நிலையத்தில் டிஜிட்டல் பிரின்டிங் கடை உரிமை யாளர் ஹரிகுமார் (25) புகாரளித்தார். அதன்பேரில், ராணிப்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மச்சிமதனை நேற்று கைது செய்தனர்.

இதனால் சிம்பு ரசிகர்களிடையே பதட்டம் ஏற்பட்டுள்ளது.

Related Posts