சிம்புதான் அடுத்த சூப்பர்ஸ்டார் -ரசிகர்கள் கொண்டாட்டம்
நாம் தமிழர் கட்சி – மராத்திய மாநிலம், கலை இலக்கியப் பண்பாட்டுப் பாசறை சார்பாக ‘இன எழுச்சி முழக்கம்’ பாடல் வெளியீட்டு விழா 05-01-2019 சனிக்கிழமை மாலை நடைபெற்றது.
இயக்குநர் வெற்றிமாறன் பாடல் குறுந்தகடை வெளியிட்டார். சீமான் வாழ்த்துரை வழங்கினார்.
இதில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ‘தமிழ் முழக்கம்’ சாகுல் அமீது, கலைக்கொட்டுதயம், அன்புத்தென்னரசன், விருகை இராஜேந்திரன், மருத்துவர் க.சிவக்குமார், மராத்திய மாநிலப் ஒருங்கிணைப்பாளர் கனக மணிகண்டன், மதுரை தென்மண்டலச் செயலாளர் வெற்றிக்குமரன் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளும் உறுப்பினர்களும் திரளாகப் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் சீமான் பேசும்போது, தன் படச் சிக்கலுக்காக நடிகர் விஜய் மிகவும் பணிவுடன் ஆட்சியாளர்களிடம் பேசியதை விமர்சித்துப் பேசினார். அதோடு தமிழகத்தின் அடுத்த சூப்பர்ஸ்டார் சிம்புதான் என்றும் பேசினார்.
இதனால் விஜய் ரசிகர்கள் அவரைத் திட்டித் தீர்க்கின்றனர். சிம்பு ரசிகர்கள் அப்பேச்சை மகிழ்வுடன் பகிர்ந்துவருகின்றனர்.











