September 23, 2026
சினிமா செய்திகள்

மாரி 2 வை எடுத்துவிட்டு கனா – அறிவிப்பால் வெடித்தது சர்ச்சை

டிசம்பர் 21 ஆம் தேதி வெளியான ஆறு படங்களில் தனுஷ் நடித்த மாரி 2 சிவகார்த்திகேயன் தயாரித்த கனா ஆகிய படங்களும் அடக்கம்.

திருநெல்வேலி ராம் சினிமாஸ் திரையரங்கில் தனுஷ் நடித்த மாரி 2 படத்தைத் திரையிட்டிருந்தனர்.

அப்படத்துக்கும் முதல்மூன்று நாட்களுக்குப் பிறகு கூட்டம் வரவில்லையாம்.

எனவே, அத்திரையரங்கில் நான்கு காட்சிகளில் இரண்டு காட்சிகள் சிவகார்த்திகேயனின் கனா படத்துக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இதை அத்திரையரங்கின் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தார்கள்.

உடனே, இது தொடக்கம்தான் இன்னும் அதிகரிக்கும் என்று சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

பதிலுக்கு தனுஷ் ரசிகர்கள் ட்வீட் போட சர்ச்சை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

Related Posts