ஹாலிவுட்டின் கவர்ச்சியில் இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு
விமல் ஆஷ்னா சவேரி, ஆனந்தராஜ், மன்சூரலிகான், சிங்கம்புலி நடிக்க ஏ.ஆர்.முகேஷ் இயக்கத்தில் சர்மிளா மாண்ட்ரே தயாரிப்பில் உருவாகியுள்ள படம் இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு படம்.
இந்தப்படத்தில் சன்னி லியோனின் உறவு முறை சகோதரி மியா ராய் லியோன் முக்கிய வேடத்தில் முதன் முறையாக அறிமுகமாகிறார்.
ஹாலிவுட்டின் அதாவது ஐரோப்பிய பட உலகில் ஆபாச பட நாயகிகளில் முதல் பெயர் இவரது தான். இவரை தமிழில் அறிமுகப் படுத்தி உள்ளனர்.
கவர்ச்சியை வாரி வழங்கி உள்ளார் மியா ராய் லியோன்.
படம் டிசம்பர் 7 ம் தேதி வெளியாகிறது.
இப்படத்தில் காவல்துறை அதிகாரி வேடத்தில் பூர்ணா நடிக்கிறார்.
இப்படம் விமலின் திரையுலக வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது.











