பிக்பாஸ் நடிகைக்கு திருமணம் – சென்னையில் நடந்தது
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பெரும்புகழ் பெற்ற சுஜாவருணி பிளஸ்2 என்ற படத்தில் நாயகியாக நடித்து திரையுலகுக்கு அறிமுகமானவர்.
பென்சில், கிடாரி, இரவுக்கு ஆயிரம் கண்கள், ஆண் தேவதை உள்பட பல படங்களில் கவர்ச்சி மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து இருக்கிறார்.
இவருக்கும், ‘சிங்கக்குட்டி’ உட்பட சில படங்களில் கதாநாயகனாக நடித்த சிவாஜிதேவ் என்கிற சிவகுமாருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. அதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர்.
காதல் திருமணம் செய்து கொள்வது பற்றி நடிகை சுஜா வருணி ஊடகங்களிடம் கூறியிருப்பதாவது….
நானும், அவரும் 12 வருடங்களுக்கு முன்பு சந்தித்தோம். முதலில் நட்பாகப் பழக ஆரம்பித்த நாங்கள் பின்னர் காதலர்களாக மாறினோம். இருவரும் 12 வருடங்களாக காதலித்து வந்தோம்.
எங்கள் காதலுக்கு பெற்றோர்கள் சமீபத்தில்தான் சம்மதம் தெரிவித்தார்கள். அதைத் தொடர்ந்து எங்கள் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமணத்துக்குப் பின் நடிப்பேனா? மாட்டேனா? என்ற கேள்விக்கே அவசியம் இல்லை. தொடர்ந்து நடிப்பேன்
என்று கூறியிருந்தார் .
இந்நிலையில், நடிகர் சிவகுமார் – நடிகை சுஜா வருணி திருமணம் இன்று (19-11-2018, திங்கட்கிழமை) காலை சென்னை அடையார் கிரவுன் பிளாசாவில் இனிதே நடைபெற்றது. சரியாக காலை 10.17க்கு மணமகன் மணமகள் கழுத்தில் மாங்கல்யம் அணிவித்தார்











