சினிமா செய்திகள்

விஸ்வாசம் ஒளிப்பதிவாளர் இந்தப் புகைப்படத்தை வெளியிட என்ன காரணம்?

தமிழர் திருநாள் வாழ்த்துகள், விஸ்வாசம் திருவிழா என்கிற அடைமொழிகளோடு விஸ்வாசம் படத்தின் ஒளிப்பதிவாளர் வெற்றி வெளியிட்ட ஒரு புகைப்படம் சமூகவலைதளங்களில் வேகமாகப் பரவிக்கொண்டிருக்கிறது.

திடீரென இப்படி ஒரு புகைப்படத்தை அவர் வெளியிடக் காரணம் என்ன?

விஸ்வாசம் படத்தை 2019 சனவரி மாதம் பொங்கல் நாளில் வெளியிடுவதாக படக்குழு தெரிவித்திருந்தது.அதையொட்டி படப்பிடிப்புக்குப் பிறகான படத்தின் வேலைகள் தீவிரமாக நடந்துகொண்டிருக்கின்றன.

இந்நிலையில், ரஜினி நடிக்கும் ‘பேட்ட’ படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று சொல்லப்படுவதால், ‘விஸ்வாசம்’ பட வெளியீடு தள்ளிப் போகலாம் என்று பேசப்பட்டது.

ஆனால் விஸ்வாசம் படம் கண்டிப்பாக பொங்கலுக்கு வெளியாகும் என்பதைச் சொல்லவே ஒளிப்பதிவாளரை வைத்து இப்படி ஒரு செய்தியை வெளியிட்டிருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

Related Posts