சினிமா செய்திகள் நடிகர்

தனுஷின் அடுத்த பட இயக்குநர் இவர்தான்

2014 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற முண்டாசுப்பட்டி படத்தின் இயக்குநர் ராம்குமார் இப்போது விஷ்ணுவிஷால் அமலாபால் நடிக்கும் ராட்சசன் படத்தை இயக்கியிருக்கிறார்.

அப்படம் விரைவில் வெளியாகவிருக்கும் நிலையில் படக்குழுவினர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது பேசிய படத்தின் நாயகன் விஷ்ணுவிஷால்,
முண்டாசுப்பட்டி படத்தின்போதே, இயக்குநர் ராமிடம் நாம் இன்னொரு படம் பண்ணலாம் என்று கேட்டேன். அவர் கதை எழுதிட்டு இருக்கேன், முடிந்ததும் சொல்கிறேன் என்றார். சில மாதங்கள் கழித்து, அந்தக் கதை உங்களுக்கு செட் ஆகாது என்றார், எனக்கு ஏமாற்றமாக இருந்தது. பின்னர் ரொம்ப நாள் கழித்து ஒரு நாள் என்னை அழைத்து கதையை சொன்னார், கதையில் ஆக்‌ஷன் அதிகமாகவே இருந்தது. எனக்கு அவ்வளவு ஆக்‌ஷன் செட் ஆகாது என்று கூறினேன்.அதன்பின் மீண்டும் வெளியில் போய்விட்டு திரும்பவும் என்னிடமே வந்தது. எனக்காக சில மாற்றங்களைச் செய்தார். இந்தப்படம் நன்றாக வந்திருக்கிறது, நிச்சயம் வெற்றிப்படமாக இருக்கும்.

இப்போதும் அவரிடம், அடுத்து நாம் படம் பண்ணலாம் என்றேன், சொல்கிறேன் என்கிறார் என்று சிரித்துக்கொண்டே சொன்ன விஷ்ணுவிஷால், அடுத்து அவர் தனுஷ் சார் படம் இயக்குகிறார் என்றும் கூறினார்.

தனுஷ் இயக்கும் படத்தை முடித்த பிறகு ராம்குமார் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் என்று சொல்கிறார்கள்.

Related Posts