சினிமா செய்திகள் நடிகை

ஶ்ரீரெட்டி செய்வது சரியா? – பிரியா பவானி சங்கர் கருத்து

சின்னத்திரையிலிருந்து திரைத்துறைக்கு வந்து,மேயாத மான், கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பிரியா பவானி சங்கர்.

இவர் இன்று சென்னையில், தனியார் அழகு நிலையத்தை திறந்து வைத்தார்.

அதன்பின்னர் பிரியா பவானி சங்கர் செய்தியாளர்களிடம் பேசினார்.அப்போது அவரிடம் நடிகைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவது பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு,

திரைத்துறையில் நடிகைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுவதை மறுக்க முடியாது. அனைத்து துறைகளிலும் பாலியல் வன்கொடுமைகளும், துன்புறுத்தலும் இருக்கிறது. அதனை ஏற்றுகொள்வதும், மறுப்பதும் நம் கையில் தான் உள்ளது.

திரைத்துறையில் நடிகை ஸ்ரீரெட்டி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதாக வெளிப்படையாக கூறி இருக்கிறார். ஒரு தவறை செய்துவிட்டு அதை வெளிப்படையாக கூறுவது நல்லது அல்ல என்று அவர் கூறினார்.

Related Posts