சினிமா செய்திகள் நடிகர்

ரஜினி பட வெளியீட்டுத் தேதியில் மாற்றமில்லை – படக்குழு உறுதி

ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான படம் எந்திரன். இதன் இரண்டாம் பாகமாக 2 ஓ உருவாகி வருகிறது. படத்தில் நாயகியாக ஏமி ஜாக்சனும், வில்லனாக இந்தி நடிகர் அக்‌‌ஷய் குமாரும் நடித்துள்ளனர். படப்பிடிப்பு முடிந்து, கிராபிக்ஸ் காட்சிகளுக்கான பணிகள் நடந்து வருகிறது.

ரூ.450 கோடி செலவில் உருவாகும் இந்தப் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டு மூன்று முறை தள்ளிப்போனது.இப்போது நவம்பர் 29-ஆம் தேதி படம் வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் படத்தின் கிராபிக்ஸ் பணிகளில் மேலும் தாமதம் ஏற்பட்டு உள்ளது என்றும், எனவே படம் அடுத்த வருடத்துக்குத் தள்ளிப்போகும் என்றும் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.

இதுகுறித்துப் படம் சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டபோது, படம் தள்ளிப்போகிறது என்று செய்தி வருவது ஏன் என்று தெரியவில்லை. படம் நிச்சயம் நவம்பர் 29 அன்று வெளியாகும் என்று சொல்கிறார்கள்.

Related Posts