சாமி 2 ரிலீஸ் தேதியில் அதிரடி மாற்றம்
ஹரி இயக்கத்தில் விக்ரம், கீர்த்திசுரேஷ், ஐஸ்வர்யாராஜேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் சாமி 2.
இந்தப்படம் செப்டம்பர் வெளியீடு என்று சொல்லப்பட்டிருக்கிறது.
ஆனால் எந்தத் தேதி என்று சொல்லப்படவில்லை.
செப்டம்பர் 13 அன்று சிவகார்த்திகேயன் நடித்த சீமராஜா படம் வெளியாகிறது.
செப்டம்பர் 28 சிம்பு விஜய்சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்த செக்கச் சிவந்த வானம் படம் வெளியாகவிருக்கிறது.
அதனால் சாமி 2 செப்டம்பர் 20 அன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அதிரடி திருப்பமாக சீமராஜா வெளியாகும் அதே தேதியில் சாமி 2 படத்தையும் வெளியிடத் திட்டமிட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
நான்கு நாட்கள் விடுமுறை இருப்பதால் இரண்டு பெரிய படங்கள் வெளியிடலாம் என்று விநியோகஸ்தர்கள் தரப்பில் சொல்லப்பட்டதால் சீமராஜா வெளியாகும் தேதியில் சாமி 2 படத்தையும் வெளியிட முடிவு செய்திருக்கிறார்களாம்.











