சினிமா செய்திகள் நடிகர்

கலைஞருக்கு இறுதிவணக்கம் செலுத்திய அஜித்

தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக, காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், நேற்று மாலை 6.10 மணிக்கு காலமானர். அவரது உடல், 11 மணியிலிருந்து 1 மணிவரை கோபாலபுரம் இல்லத்தில் பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்தது.

அதையடுத்து, 1 மணியிலிருந்து 5 மணிவரை சி.ஐ.டி காலனியிலுள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அதன்பின்னர், அவரது உடல் சி.ஐ.டி காலனியிலிருந்து தொண்டர்கள் முழக்கத்துடன் ஆம்புலன்ஸ் மூலம் ராஜாஜி அரங்கத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டது. ஆம்புலன்ஸுக்கு முன்னே மு.க.ஸ்டாலின் காரில் சென்றார்.

ராஜாஜி அரங்கத்தில் ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்துவதற்காக காத்திருக்கிறார்கள். தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் கருணாநிதியின் உடல் வைக்கப்பட்டுள்ள இடத்துக்கு அருகில் அமர்ந்துள்ளனர். காவல் துறையினர், பொதுமக்களைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உடலுக்கு நடிகர் அஜித், தன் மனைவி ஷாலினியுடன் வந்து அஞ்சலி செலுத்தினார்.

Related Posts