விஜய்யும் அஜித்தும் வெளிநாட்டுக்காரர்களா? – கிளம்பியது புது சர்ச்சை
திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி, கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
தமிழகத்தில் மட்டுமின்றி இந்திய அரசியலிலலும் மூத்த தலைவர் என்பது மட்டுமின்றி கலைத்துறையில் தீவிர ஈடுபாடு காட்டியவர்.
இந்தியாவின் முதல்குடிமகனான குடியரசுத்தலைவர், பிரதமர் மோடி ஆகியோர் அவரைப் பற்றி விசாரித்து பதிவு போடுகிறார்கள்.
நேரடி எதிரிகளான அதிமுகவைச் சேர்ந்த தமிழக முதல்வர், துணைமுதல்வர் மற்றும் அமைச்சர்கள், காங்கிரஸ் கட்சித்தலைவர் ராகுல்காந்தி உட்பட பல்வேறு வடநாட்டுத்தலைவர்கள், மலேசியா சபாநாயகர் உள்ளிட்ட வெளிநாட்டுத்தலைவர்கள் நேரில் வந்து போகின்றனர்.
திரைத்துறையிலிருந்து கமல், ரஜினி,விக்ரம், சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களும் வந்து பார்த்திருக்கின்றனர்.
இந்நிலையில் தமிழின் முன்னணி நடிகர்களான விஜய் மற்றும் அஜித் ஆகியோர் கலைஞர் கருணாநிதியைப் பார்க்க வரவில்லை என்கிற விமர்சனம் எழுந்துள்ளது.
விஜய் அஜித் ஆகிய இருவரும் வெளிநாட்டுக்காரர்களா? தமிழகத்தின் முதுபெரும் தலைவர் தீவிர சிகிச்சையில் இருக்கும்போது இந்தியாவே வந்து பார்க்கிறது. இவர்கள் வரமாட்டார்களா? என்கிற விமர்சனங்கள் வருகின்றன.











