சிவகார்த்திகேயன் அம்மாவாக நடிக்கிறார் ராதிகா
சிவகார்த்திகேயன் இப்போது சீமராஜா படத்தை முடித்துவிட்டார்.
அதைத் தொடர்ந்து இன்று நேற்று நாளை பட இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படம் மற்றும் எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஒரு படம் ஆகியனவற்றில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
ரவிக்குமார் இயக்கும் படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு முடிந்தவுடன் ராஜேஷ் இயக்கும் படப்பிடிப்பில் கலந்து கொண்டார் சிவகார்த்திகேயன்.
அந்தப்படத்தில் நாயகியாக நயன்தாரா நடிக்கவிருக்கிறார். இதனிடையே படத்தில் சிவகார்த்திகேயன் அம்மா வேடத்தில் ராதிகா நடிக்கிறார்.
அவர்கள் இருவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டுவருவதாகச் சொல்லப்படுகிறது.











