தனுஷ் படத்தின் புதிய லோகோ வெளியானது
தனுஷ், மேகா ஆகாஷ் உட்பட பலர் நடிப்பில் கெளதம் மேனன் எழுதி இயக்கும் படம் என்னை நோக்கிப் பாயும் தோட்டா.
சில காரணங்களால் தாமதமான இந்தப்படம் இப்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியிருக்கிறது.
ஜூலை 16 ஆம் தேதி இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தொடங்கியது.
படப்பிடிப்பில் தனுஷுடன் சசிகுமாரும் கலந்து கொண்டார்.
சசிகுமாரோடு படப்பிடிப்பில் இருக்கிறோம் , மூன்று இயக்குநர்கள் இணைந்திருக்கிறோம் என்று கெளதம்மேனன் சொல்ல , உங்களோடு சேர்ந்து வேலை செய்வது எனக்கு பெரிய சந்தோஷம் என்கிறார் சசி குமார்.
படப்பிடிப்பு தொடங்கிய அன்றே அறிவித்தபடி இப்படத்தின் புதிய லோகோ இன்று இரவு 7.30 மணிக்கு வெளியிடப்பட்டது.











