September 23, 2026
சினிமா செய்திகள்

ரஜினியின் 2 ஓ பட ரிலீஸ் தேதியை அறிவித்தார் ஷங்கர்

ஷங்கர் இயக்கத்தில்   ரஜினிகாந்த்    நடித்துள்ள படம், ‘2.O.’ கடந்த 2010-ல் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்திய ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமாக தயாராகி உள்ளது.

இதில் ரஜினிகாந்த் ஜோடியாக எமிஜாக்சனும் வில்லனாக இந்தி நடிகர் அக்‌ஷய்குமாரும் நடித்துள்ளனர்.

இதன் படப்பிடிப்பு முடிந்து கடந்த தீபாவளிக்கே படத்தை திரைக்கு கொண்டு வர படக்குழுவினர் திட்டமிட்டு இருந்தனர். ஆனால் திரையிட முடியவில்லை. கிராபிக்ஸ் வேலைகள் திட்டமிட்டபடி முடியாததால் ரிலீஸ் தேதி மீண்டும் மீண்டும் தள்ளிப்போனது.

கிராபிக்ஸ் பணிகளை முடிப்பதற்கு மேலும் கால அவகாசம் தேவைப்பட்டதால் ரிலீஸ் தேதியில் குழுப்பமும் நீடித்தது. தற்போது படத்தின் இயக்குநர் சங்கர், கிராபிக்ஸ் பணிகள் விரைவில் முடிய இருப்பதாகவும், அதனால் படத்தை நவம்பர் மாதம் 29ம் தேதி வெளியிட இருப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.

முன்னதாக ஆகஸ்ட் 15, அக்டோபர் 18 ஆகிய தேதிகள் பரிசீலிக்கப்பட்டதாகவும் இறுதியாக தீபாவளி என்று யோசித்து கடைசியில் இந்த தேதியை அறிவித்திருக்கிறார்கள்.

 

 

 

Related Posts