சினிமா செய்திகள் நடிகை

பிக்பாஸ் 2 மீறி கெத்து காட்டிய ஓவியா

சற்குணம் இயக்கத்தில் விமல் , ஓவியா உள்ளிட்ட பலர் நடிக்கும் களவாணி2 படத்தின் வேலைகள் வேகமாக நடந்து கொண்டிருக்கின்றன.

இந்தப் படத்தின் முதல்பார்வை இன்று மாலை ஆறு மணிக்கு வெளியிடப்படும் என்று அறிவித்திருந்தார்கள்.

அதன்படி நடிகர் மாதவன், தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் மாலை ஆறு மணிக்கு முதல் பார்வையை வெளியிட்டார்.

வெளியிட்ட சில நிமிடங்களிலேயே இணையப்பக்கங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பரபரப்பாகப் பகிரப்படுகிறது.

அதற்குக் காரணம் ஓவியா. பிக்பாஸ் 1 மூலம் அவர் புகழ்பெற்றார்.

இப்போது பிக்பாஸ் 2 ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தாலும் அதற்குக் கிடைக்கும் வரவேற்பை விட ஓவியாவுக்கு அதிக வரவேற்பு கிடைத்துக் கொண்டிருக்கிறது.

Related Posts