சினிமா செய்திகள்

அனுமதியின்றி வெளியிடப்பட்ட விஜய் புகைப்படத்தால் சர்ச்சை

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் கீர்த்திசுரேஷ் உள்ளிட்டோர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்துவருகிறது.

படத்தின் பெயரும் முதல் பார்வையும் விஜய் பிறந்த நாளில் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

விஜய்யுடன் கீர்த்தி சுரேஷ் நடித்தபோது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்தப் புகைப்படத்தில் விஜய் தரையில் உட்கார்ந்து இருக்கிறார். அருகே சோபாவில் கீர்த்தி சுரேஷ் அமர்ந்து கொண்டு விஜய் காலின் மீது தனது காலை வைத்து மிதிக்கிறார்.

படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பு எடுக்கப்பட்டு ரகசியமாக வைத்திருந்த இந்த புகைப்படத்தை யாரோ படக்குழுவினர் அனுமதி இல்லாமல் சமூக வலைத்தளத்தில் கசிய விட்டுள்ளனர். இது வைரலாக பரவியதும் உடனே நீக்கி விட்டார்கள்.

இந்தப் படத்தை பார்த்த விஜய் ரசிகர்கள், கீர்த்தி சுரேசைக் கண்டித்தும், விமர்சித்தும் வருகின்றனர். கீர்த்தி சுரேசுக்கு எதிராக மீம்ஸ்களை உருவாக்கியும் பரவ விடுகின்றனர். இதனால் கீர்த்தி சுரேஷ் அதிர்ச்சியாகி இருக்கிறார்.

எதற்காக இப்படி ஒரு புகைப்படம் எடுக்கப்பட்டது என்று தெரியாமல் விஜய் ரசிகர்கள் விமர்சனம் செய்வது ஏற்புடையதல்ல என்று பலரும் சொல்கிறார்கள்.

Related Posts