சினிமா செய்திகள் நடிகர்

இலாபத்தில் பங்கு கேட்ட ரஜினி அதிர்ந்த தனுஷ்

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் காலா படம் ஜூன் 7 அன்று வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்தப் படத்தை ரஜினியின் மருமகன் தனுஷ் தயாரித்திருக்கிறார்.

காலா படத்தை மருமகன் தயாரிக்கிறார் என்பதற்காக இலவசமாக ரஜினிகாந்த் நடிக்க வில்லையாம்.

ஜிஎஸ்டி வரியோடு சேர்த்து சம்பளம் வாங்கிக் கொண்டார் என்று சொல்கிறார்கள்.

சம்பளம் மட்டும் இல்லையாம். படத்தின் இலாபத்திலும் பங்கு வேண்டும் என்றும் கேட்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.

எவ்வளவு இலாபம் என்றெல்லாம் கணக்கு போடாமல், என் பங்காக இருபத்தைந்து கோடி கொடுத்துவிடுங்கள் என்று கேட்டிருப்பதாகத் தகவல்.

அதை அப்படியே தன் மகளும் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா பெயரில் வங்கி வைப்புத்தொகையாகப் போட்டு வைக்கச் சொல்லிவிட்டாராம்.

ரஜினியின் இந்தச் செயலை தனுஷ் சிறிதும் ரசிக்க வில்லை என்றாலும் ரஜினி கேட்டதை ஒரு ரூபாய் பாக்கியில்லாமல் கொடுத்துவிடலாம் என்று சொல்லியிருக்கிறாராம்.

மாமன் மருமகன் என்றாலும் வியாபாரம் வியாபாரம்தான் போலும்.

Related Posts