சினிமா செய்திகள்

மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணையும் நயன்தாரா. ஏன்?

சிவகார்த்திகேயன் தற்போது பொன்ராம் இயக்கத்தில் சீமராஜா படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் இறுதிக்கட்டத்தை எட்டவிருக்கிறது.

இந்நிலையில், எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் படத்தை ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்க இருக்கிறார். சமீபத்தில் இந்தப் படத்தின் பூஜை நடந்தது.

இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா நடிக்க இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நயன்தாரா இதற்கு முன்னதாக வேலைக்காரன் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்திருந்தார்.

விரைவில் நயன்தாரா கலந்துகொள்ளும் படப்பிடிப்பு நடைபெறும் என்று சொல்கிறார்கள்.

கதாநாயக்னுக்கு சவால் விடுகிற அளவுக்குப் பலமான நாயகி வேடம் என்பதால் நயன்தாராவை ஒப்பந்தம் செய்திருப்பதாகச் சொல்கிறார்கள்.

Related Posts