செய்திக் குறிப்புகள்

இயக்குநரானார் பிரபல நடிகை

ஆரியா நடித்த கலாபக்காதலன் உள்ளிட்ட பல படங்களில் நடித்த அக்‌ஷயா இப்போது இயக்குநராகியிருக்கிறார். அவர் இயக்கும் படத்தின் பெயர் யாளி.

இந்தப் படத்தில் தமன் கதாநாயகனாக நடிக்கிறார்.இயக்குவதோடு கதாநாயகியாகவும் நடித்து இருக்கிறார் அக்ஷயா. மற்றும் ஊர்வசி, மனோபாலா இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் அர்ஜுன் என்ற புதுமுகம் நடித்திருக்கிறார்.

படம் பற்றி இயக்குநரும், நாயகியுமான அக்‌ஷயா கூறியதாவது..

பெண் இயக்குநர்களுக்கு தமிழ் சினிமாவில் எப்போதும் நல்ல வரவேற்பு இருக்கும் அந்த வரிசையில் நான் இணைந்துள்ளேன். இது ஒரு ரொமான்டிக், திரில்லர் படம். மும்பை பின்னணியில் நடக்கும் கதை.

முக்கியமான மூன்று கதாபாத்திரங்களைச் சுற்றி திரைக்கதை நகரும். நாயகி ஜனனி ( அக்ஷயா ),நாயகன்(தமன் )இருவரும் காதலிக்கிறார்கள். ஆனால் இவர்களுக்குத் தொடர்பு இல்லாத பாலா
( அர்ஜுன் ) என்ற கதாபாத்திரம் ஜனனியைப் பின்தொடர்கிறார்.

யார் அவர்? எதற்காக ஜனனியைப் பின் தொடர்கிறார்?, அந்த நேரத்தில் மும்பையில் தொடர் கொலை சம்பவங்கள் வேறு நடக்கின்றன. அந்த கொலை சம்பவங்களுக்கும் இந்த மூன்று கதாபாத்திரத்திரங்களுக்கும் என்ன தொடர்பு? இறுதியில் ஜனனி என்ன ஆனார்? என்பதுதான் படத்தின் கிளைமாக்ஸ்.

விறு விறுப்பான திரைக்கதை ரசிக்கும்படியாக இருக்கும்.

படப்பிடிப்பு மும்பை, மலேசியா,சென்னை போன்ற இடங்களில் நடைபெற்றது, ஜூன் மாதம் இசை வெளியீட்டு விழா மிக பிரமாண்டமாக நடைபெற உள்ளது. ஜூலை மாதம் படம் திரைக்கு வர உள்ளது என்கிறார் அக்ஷயா.

Related Posts