வெற்றிமாறன் மீது வெறுப்பில் இருக்கும் சிம்பு – விவரம்
வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் அரசன் படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 8,2025 அன்று தொடங்கியது.அந்தப்படத்தின் படப்பிடிப்பு விட்டுவிட்டு நடந்துகொண்டிருந்தது.
படம் தொடங்கிய நேரத்திலும் அதன்பின்பும் இவ்வாண்டு தீபாவளியை முன்னிட்டு நவம்பர் மாத தொடக்கத்தில் படம் வெளியாகிவிடும் என்று சொல்லப்பட்டது.ஆனால் நடைமுறை அப்படியில்லை.படம் அவர்கள் நினைத்தபடி நடக்கவில்லை.அதனால் பட வெளியீடு மேலும் தள்ளிப்போகும் என்று சொல்லப்பட்டது.
ஆனால்,இப்போது அப்படத்தின் நிலவரம் மேலும் பின்னடைவைச் சந்தித்திருக்கிறது என்று சொல்கிறார்கள்.
என்னாச்சு?
அரசன் படம் தொடங்கிய பின்பு ராஜன் வகையறா எனும் இணையத் தொடரை இயக்கத் தொடங்கினார் வெற்றிமாறன்.அமீர்,கென்கருணாஸ் உட்பட பலர் நடிக்கும் அத்தொடர்,நாளடைவில் திரைப்படமாகவே மாறிவிட்டது.அதற்கேற்ப திரைக்கதையை மாற்றி படமெடுத்துக் கொண்டிருக்கிறார் வெற்றிமாறன்.
டான் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்கவிருந்த படம்,படப்பிடிப்புக்குப் போகும் நேரத்தில் எதிர்பாராமல் தடைபட்டதால் அதிர்ச்சியடைந்த சிம்பு,உடனே அதிலிருந்து மீண்டு வெற்றிமாறனோடு இணையும் அறிவிப்பை வெளியிட்டார்.அப்போதே,இந்தப்படம் மற்ற வெற்றிமாறன் படங்கள் போல் தாமதமாகாமல் வேகமாகப் படப்பிடிப்பை முடித்து படத்தை வெளியிட்டுவிடுவார்கள் என்றும் சொன்னார்கள்.
ஆனால்,நடப்பது நேர்மாறாக இருக்கிறது.
இப்போது அரசன் படத்துக்கு முன்பாக ராஜன் வகையறா படத்தை வெளியிட முடிவு செய்துவிட்டாராம் வெற்றிமாறன்.அதற்கேற்ப அப்படத்தின் படப்பிடிப்பை வேகப்படுத்தியிருக்கிறார்.அப்படத்தை இவ்வாண்டு டிசம்பர் அல்லது அடுத்த ஆண்டு பொங்கலின்போது வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்களாம்.அதற்காக வேகமாக வேலைகளைச் செய்துகொண்டிருக்கிறார்கள்.
இப்போதும் சுமார் நாற்பது நாட்கள் நடக்கிற மாதிரி திட்டமிட்டு ராஜன் வகையறா படப்பிடிப்பை நடத்திக் கொண்டிருக்கிறார் வெற்றிமாறன்.
அரசன் படத்தின் படப்பிடிப்பு இன்னும் இரண்டு மாதங்கள் வரை நடத்தப்படவேண்டும் என்கிற நிலையில் இருக்கிறதாம்.அப்படியானால் ராஜன் வகையறா படப்பிடிப்பு முடிந்தவுடனே அரசன் படப்பிடிப்பு தொடங்கினாலே இவ்வாண்டு நிறைவடைந்துவிடும் எனும் நிலை.
இதனால்,கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட படத்தின் படப்பிடிப்புக்கும் போகமுடியாத நிலையில் இருக்கிறாராம் சிம்பு.
அரசன் படமும் திட்டமிட்டபடி நடக்கவில்லை,இதை முடிக்காமல் அடுத்தபடத்துக்கும் போகமுடியவில்லை.அதனால் சும்மா இருக்கிறார் சிம்பு.
அவர் சும்மா உட்கார்ந்து கொண்டிருக்கும் நேரத்தில் ராஜன் வகையறாவில் வெற்றிமாறன் வேலைபார்த்துக் கொண்டிருக்கிறார்.அரசன் படத்தைத் முடிக்காமல் ராஜன் வகையறாவை முடிப்பதில் வெற்றிமாறன் முனைப்பாக இருப்பதால் அவர் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார் சிம்பு என்கிறார்கள்.













