ரஜினியின் காலா – தொலைக்காட்சி உரிமை விலை என்ன தெரியுமா?
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி அடித்திருக்கும் காலா படத்தை ரஜினியின் மருமகன் தனுஷ் தயாரித்திருக்கிறார்.
இப்படம் ஏப்ரல் 27 அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் மார்ச் 1 ஆம் தேதி முதல் தமிழ்த்திரையுலகில் வேலை நிறுத்தம் தொடங்கியதால் பட வெளியீடுகளில் நிறைய மாற்றங்கள்.
இதனால் இந்தப்படம் ஜூன் 7 ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லியிருக்கிறார்கள்.
இந்நிலையில் இந்தப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை வாங்கியிருப்பதாக அறிவித்திருக்கிறது.
தமிழுக்கு மட்டுமின்றி தென்னிந்தியா முழுமைக்கும் அவர்களே பொறுப்பெடுத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.
இதற்காக அவர்கள் கொடுத்துள்ளதாகச் சொல்லப்படுகிற தொகை எவ்வளவு தெரியுமா? எண்பத்தைந்து கோடி என்கிறார்கள்.











