உண்மையான படைப்பாளியின் முழுமையான கமர்சியல் படம் – விவரம்
‘ஜமா’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற பாரி இளவழகன்,கதாநாயகனாக நடித்ததுடன் கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ள படம் அன்பே டயானா. இப்படத்தில்,‘நீக்’(NEEK) திரைப்படத்தின் மூலம் இளைஞர்களின் கவனத்தை பெற்ற ரம்யா ரங்கநாதன் கதாநாயகியாக நடித்துள்ளார்.
சென்னையின் பெரம்பூர் பகுதியை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள இந்ததிரைப்படம்,வெவ்வேறு கலாச்சாரப் பின்னணியைச் சேர்ந்த இருவரின் காதலை மையமாகக் கொண்ட கிராஸ்-கல்ச்சுரல் லவ்ஸ்டோரி ஆக உருவாகியுள்ளது.
தமிழ்சினிமாவின் முன்னணி நடிகை ரோஜா,நீண்ட இடைவெளிக்குப் பிறகு முக்கியமான முழுநீள கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.அவரது கதாபாத்திரம் இரசிகர்களிடம் நல்லவரவேற்பைப் பெறும் என்றும் படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்தனர்.மேலும் சேத்தன்,பரிதாபங்கள் கோபி,இஸ்மத் பானு,சுதர்சன் காந்தி,செல் முருகன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
‘மண்டேலா’,‘மாவீரன்’படங்களின் இசையமைப்பாளர் பரத்சங்கர் இசையமைத்துள்ள இப்படத்திற்கு,‘அருவி’ புகழ் ஷெல்லிகேலிஸ்ட் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பை பார்த்தா மேற்கொண்டுள்ள நிலையில், கலைஇயக்கத்தை மகேந்திரன் கவனித்துள்ளார். பாடல்களை மோகன்ராஜன்,முத்தமிழ்,பாக்கியம் சங்கர் ஆகியோர் எழுதியுள்ளனர்.
‘மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ்’ (Million Dollar Studios) மற்றும் ‘நியோ கேசில் கிரியேஷன்ஸ்’ (Neo Castle Creations) இணைந்து தயாரித்துள்ள இப்படம் ஜூலை 17, 2026 உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில்,‘அன்பே டயானா’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா ஜூலை 11 அன்று சென்னையில் நடைபெற்றது.
இந்தநிகழ்ச்சியில் படக்குழுவினர் மற்றும் படத்தில் நடித்த நடிகர்கள் கலந்துகொண்டு,திரைப்படம் குறித்த பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை பத்திரிகையாளர்களுடன் பகிர்ந்து கொண்டனர்.
பரிதாபங்கள் கோபி பேசியதாவது..,
இந்தப்படத்தில் பணியாற்ற வாய்ப்பு கொடுத்த Million Dollar Studios, Neo Castle Creations மற்றும் இந்தப்படத்தின் தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இயக்குநர் பாரிஇளவழகன் சகோதரருக்கு சிறப்பு நன்றி. என்னை நம்பி இந்தக்கதாபாத்திரத்தை கொடுத்திருக்கிறார்.அவருடைய‘ஜமா’பார்த்ததிலிருந்தே அவருடைய படைப்புமீது எனக்கு ஒரு தனிமரியாதை இருந்தது.அவர் கதை சொல்லி போகும்முன்பே நான் நடிப்பதாய் ஒத்துக்கொண்டேன்.அவருடன் இணைந்து பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
அதேபோல் ஒளிப்பதிவாளர் ஷெல்லி கேலிஸ்ட் அவர்களுக்கும் என்னுடைய நன்றி.‘அருவி’படத்திலேயே அவருடைய ஒளிப்பதிவை மிகவும் இரசித்திருக்கிறேன். இந்தப்படத்திலும் ஒவ்வொரு காட்சியையும் மிகவும் அழகாக பதிவு செய்திருக்கிறார்.படத்தின் காட்சியமைப்புகள் அனைவருக்கும் நிச்சயம் பிடிக்கும்.
இந்தப்படத்தில் பணியாற்றிய நடிகர்கள்,தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் முழுபடக்குழுவினருக்கும் என்னுடைய வாழ்த்துகளும் நன்றியும்.‘அன்பே டயானா’ படத்திற்கு இரசிகர்கள் நல்லவரவேற்பு அளிப்பார்கள் என்று நம்புகிறேன்.நன்றி என்றார்.
நடிகை ரோஜா பேசியதாவது….
இந்தப்படத்தின் கதையை கேட்டவுடனே இது ஒரு அழகான குடும்பப் பொழுதுபோக்கு திரைப்படம் என்பதை உணர்ந்தேன்.குடும்பபாசம்,உறவுகள்,காதல்,உணர்வுகள் என அனைத்தும் சரியான விகிதத்தில் கலந்த ஒரு நல்ல படமாக‘அன்பே டயானா’உருவாகியுள்ளது.எனக்கு ஆந்திராவிலிருந்து தமிழகம் வந்து செட்டிலான பெண் வேடம்,என் நிஜவாழ்க்கைப் பாத்திரம் போலவே இருந்தது.
குறிப்பாக படத்தின் கிளைமாக்ஸ் அனைவரின் மனதையும் தொடும்.அது மிகவும் வித்தியாசமாகவும்,நிறைவான அனுபவத்தை தரக்கூடியதாகவும் இருக்கும்.அந்தக்காட்சி இரசிகர்களை நிச்சயம் கவரும்.
இயக்குநர் பாரி இளவழகன் மிகவும் திறமையானவர். அவருடைய உழைப்பும்,படத்தின் மீது இருந்த அர்ப்பணிப்பும் ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது. அவருக்கும்,கதாநாயகி ரம்யாவுக்கும் என்னுடைய வாழ்த்துகள்.
இந்தப்படத்தில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர் மற்றும் அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களும் மிகச்சிறப்பாக வேலை செய்துள்ளனர்.குறிப்பாக கேமரா வேலை மிகவும் அருமையாக இருந்தது.பலகாட்சிகள் ஒரேஷாட்டில் மிக அழகாக படமாக்கப்பட்டுள்ளன.
‘அன்பே டயானா’ முழுக்கமுழுக்க குடும்பத்துடன் அமர்ந்து இரசிக்கக்கூடிய பொழுதுபோக்கு திரைப்படம். அனைவரும் திரையரங்குகளில் வந்து இந்தப்படத்தை பார்த்து ஆதரவு அளிக்கவேண்டும்.படக்குழுவினர் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி என்றார்.
Eraa Entertainment சார்பில் தயாரிப்பாளர் சத்யா கரிகாலன் பேசியதாவது……
இந்த அழகான திரைப்படத்தின் ஒருபகுதியாக இருப்பதில் மிகவும் மகிழ்ச்சி.‘அன்பே டயானா’ ஒரு சாதாரண காதல்படம் மட்டும் அல்ல.குடும்பஉறவுகள், உணர்வுகள்,நகைச்சுவை என அனைவரையும் இணைக்கும் முழுமையான பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ளது.
இந்தப்படத்தின் மீது முழுநம்பிக்கையுடன் பணியாற்றிய இயக்குநர் பாரிஇளவழகன் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் என்னுடைய பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.அவர்களின் அர்ப்பணிப்பும், உழைப்பும் திரையில் நிச்சயம் தெரியும்.
மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ்,நியோ கேசில் கிரியேஷன்ஸ் மற்றும் இந்தப்படத்துடன் இணைந்த அனைத்து நிறுவனங்களுக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் திறமையான நடிகர்கள் இணைந்து இந்தப்படத்தை இன்னும் சிறப்பாக்கியுள்ளனர்.
‘அன்பே டயானா’ அனைத்துதரப்பு இரசிகர்களும் குடும்பத்துடன் இணைந்து இரசிக்கக்கூடிய ஒரு நல்ல திரைப்படமாக இருக்கும்.நன்றி என்றார்.
படத்தொகுப்பாளர் பார்த்தா பேசியதாவது…..
இந்தநிகழ்ச்சிக்கு வந்துள்ள ஊடகநண்பர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் அனைவருக்கும் என்னுடைய நன்றி.
நான் பாரிஇளவழகனுடன்‘ஜமா’படத்திலேயே பணியாற்றியிருக்கிறேன்.நாங்கள் நீண்டநாள் நண்பர்கள். இந்தமேடை,இந்ததருணம் எல்லாமே பலவருட கனவு என்று சொல்லலாம்.
‘ஜமா’முடித்தபிறகு,‘அன்பே டயானா’ படத்தின் ஒன்லைனை பாரி என்னிடம் முதன்முதலாக சொன்னபோதே மிகவும் உற்சாகமாக இருந்தது.அதற்கு முக்கியக்காரணம்,நாங்கள் இருவருமே பெரம்பூரைச் சேர்ந்தவர்கள்.பெரம்பூரை மையமாக வைத்து ஒரு அழகானகதையை அவர் உருவாக்கியிருக்கிறார்.
அதன்பிறகு,இந்தப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது என்று சொன்னபோது இன்னும் அதிக நம்பிக்கை வந்தது.யுவராஜ் பிரதருக்கும், நியோகேசில் கிரியேஷன்ஸ்,Era Entertainment நிறுவனங்களுக்கும் என்னுடைய நன்றி.இந்தக்கதை சரியான கைகளுக்குத்தான் சென்றிருக்கிறது என்று அப்போதே தோன்றியது.
இந்தப்படத்தின் மிகப்பெரிய பலமே நடிகர் தேர்வு. ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் மிகவும் பொருத்தமான நடிகர்களைத் தேர்வு செய்திருக்கிறார்கள்.ரம்யா, பரிதாபங்கள் கோபி,சேத்தன் சார் என அனைவரும் தங்களுடைய கதாபாத்திரங்களை மிகச்சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் பரத்சங்கர் இந்தப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருந்திருக்கிறார்.அவருடைய இசை படத்தின் உணர்வுகளை இன்னும் அழகாக எடுத்துச்செல்லும்.
ஒளிப்பதிவாளர் ஷெல்லிகேலிஸ்ட் பெரம்பூரை இதுவரை யாரும் காட்டாத அளவுக்கு அழகாக படமாக்கியிருக்கிறார்.அது இந்தப்படத்தின் மிகப்பெரிய சிறப்புகளில் ஒன்றாக இருக்கும்.ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். ‘அன்பே டயானா’மிகப்பெரிய வெற்றிபெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.நன்றி என்றார்.
இசையமைப்பாளர் பரத்சங்கர் பேசியதாவது…..
இந்தப்படத்தைப் பற்றி சொல்லவேண்டுமென்றால்,பாரி முதன்முதலில் கதையைச் சொல்ல ஆரம்பித்தபோதே பெரம்பூரைப் பற்றி அவர் சொன்னவிதம் என்னை மிகவும் கவர்ந்தது.நான் சென்னை பையன்.பெரம்பூருக்கு நிறைய முறை சென்றிருக்கிறேன்.ICF-ல் பஸ் ஏறியிருக்கிறேன், 29C பஸ்ஸில் பயணம் செய்திருக்கிறேன்.ஆனால்,அவர் பெரம்பூரை விவரித்த விதம்,அது தனிஉலகம் போல இருந்தது.அந்தஇடத்தை நேரில் சென்று பார்க்கவேண்டும் என்ற ஆர்வத்தை அவருடைய கதை எனக்குள் உருவாக்கியது.
அந்தக்கதையை என் நண்பர்களிடமும் மிகவும் உற்சாகமாகச் சொல்லியிருக்கிறேன்.அப்போதுதான், இந்தக்கதையின் மீது எனக்கே தெரியாமல் ஒரு பெரிய ஈர்ப்பு உருவாகியிருப்பதை உணர்ந்தேன்.அதனால்,படவேலைகள் தொடங்குவதற்கு முன்பே மூன்று,நான்கு முறை பெரம்பூருக்குச் சென்று, பாரி குறிப்பிட்ட இடங்களை எல்லாம் சுற்றிப்பார்த்தேன். நமக்குத் தெரிந்த சென்னை நகரத்திலேயே,இதுவரை கவனிக்காமல்விட்ட ஒரு புதியஉலகத்தை கண்ட உணர்வு அது.
இந்தப்படத்தில் வரும் பெரும்பாலான கதாபாத்திரங்களும்,பாரி தனது வாழ்க்கையில் சந்தித்த உண்மை மனிதர்களிடமிருந்து ஈர்க்கப்பட்டவை. அதனால்தான் இந்தப்படம் எனக்கு மிகவும் ஸ்பெஷலானது.இசை,பின்னணி இசை,திரைக்கதை, நடிகர்களின் நடிப்பு என ஒவ்வொரு விஷயத்திலும் முழுமையான திருப்தியுடன் வேலை செய்திருக்கிறேன். ஒரு இசையமைப்பாளராக மட்டுமல்ல,படம் பார்த்த ஒரு இரசிகனாகவும் இந்தப்படத்தின் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கிறது.
இந்த வாய்ப்பை வழங்கிய யுவராஜ்,நரேன்,மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் குழுவினர்,ஷார்ஜன்,விவேக் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.அதேபோல் பாரி, எடிட்டர் பார்த்தா,ஒளிப்பதிவாளர் ஷெல்லி ஆகியோருக்கும் சிறப்பு நன்றி.அவர்களுடைய பணி இந்தப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது.
ரம்யா,சேத்தன் சார்,ரோஜா மேம்,கோபி மற்றும் படத்தில் நடித்துள்ள அனைத்து நடிகர்களும் தங்களுடைய கதாபாத்திரங்களை மிகச்சிறப்பாக உயிர்ப்பித்திருக்கிறார்கள்.ஒவ்வொருவரின் நடிப்பும் இரசிகர்களை வெகுவாகக் கவரும்.
இந்தப்படத்தில் பணியாற்றி முடித்தபோது எனக்கு ஒரு நிறைவான,மனநிறைவான உணர்வு ஏற்பட்டது.அதே உணர்வை படம் பார்க்கும் இரசிகர்களும் அனுபவிப்பார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்.இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றி.
இப்போது நீங்கள் கேட்டிருக்கும் பாடல்கள் ஒரு ஆரம்பம் மட்டும்தான்.இன்னும் இந்தப்படத்தில் நிறைய சோல்ஃபுல் பாடல்களும்,இசை தருணங்களும் உங்களை காத்திருக்கின்றன.அவை வெளியாகும்போது‘அன்பே டயானா’இசையின் முழுவலிமையையும் நீங்கள் உணர்வீர்கள்.நன்றி என்றார்.
சிறப்புவிருந்தினர் இயக்குநர் தினகரன் சிவலிங்கம் பேசியதாவது….
அனைவருக்கும் வணக்கம்.இந்தநிகழ்ச்சியில் கலந்துகொள்வதில் மிகவும் மகிழ்ச்சி.பாரிஇளவழகனின் பயணத்தை நான் நீண்டகாலமாக பார்த்துவருகிறேன். அவர் மிகவும் அர்ப்பணிப்புடன் உழைக்கும் மனிதர். சினிமாமீது இருக்கும் காதலும்,விடாமுயற்சியும் தான் இன்று அவரை இந்தமேடைக்கு கொண்டு வந்திருக்கிறது.அந்தப்பயணம் பலருக்கும் ஒரு உத்வேகமாக இருக்கும்.
‘அன்பே டயானா’படத்தின் டிரெய்லரை பார்த்தபோது, இது ஒரு அழகான குடும்பப்பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டது.அதில் இருக்கும் உணர்வுகளும், கதாபாத்திரங்களும் மிகவும் இயல்பாக இருந்தன.இந்தப்படத்தில் நடித்துள்ள அனைத்து நடிகர்களும் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார்கள். குறிப்பாக பரிதாபங்கள் கோபி உள்ளிட்ட அனைவரின் கதாபாத்திரங்களும் இரசிகர்களை கவரும் என்று நம்புகிறேன்.
ஒளிப்பதிவாளர் ஷெல்லிகேலிஸ்டின் ஒளிப்பதிவு மிகவும் அழகாக இருக்கிறது.‘அருவி’ படத்தில் அவரது பணியை இரசித்தது போலவே,இந்தப்படத்திலும் காட்சிகளை மிகவும் நேர்த்தியாக பதிவுசெய்திருக்கிறார். இந்தப்படத்தின் புரமோஷன்,பப்ளிசிட்டி டிசைன், டிரெய்லர் என ஒவ்வொரு விஷயத்திலும் படக்குழுவின் அக்கறை தெரிகிறது.அதற்காக தயாரிப்பாளர்கள் மற்றும் முழுகுழுவினருக்கும் என்னுடைய பாராட்டுகள்.
‘அன்பே டயானா’இரசிகர்களின் மனதை கவரும் ஒரு வெற்றிப்படமாக அமையும் என்று நம்புகிறேன். ஒட்டுமொத்த படக்குழுவிற்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.நன்றி என்றார்.
நடிகர் சேத்தன் பேசியதாவது….
அனைவருக்கும் வணக்கம்.பாரி முதலில் இந்தக்கதையை என்னிடம் சொல்ல வந்தபோது,‘நான் என்ன கதாபாத்திரம் பண்ணப்போகிறேன்?’என்று கேட்டேன். அதற்கு,‘நீங்கள்தான் அப்பா கதாபாத்திரம்’என்றார். அதைக்கேட்டதும்,‘என்னடா,தொடர்ந்து அப்பா கதாபாத்திரம்தானா வருகிறது?’என்று கொஞ்சம் தயக்கமாக இருந்தது.நான் கிண்டலாக,‘நண்பன் சமுத்திரகனி இன்னும் இளைஞனாக நடித்துக்கொண்டிருக்கிறார்;நான் மட்டும் அப்பாவாகிவிட்டேனே!’என்று சொன்னேன்.அதற்கு பாரி, ‘நீங்க யங் ஃபாதர்’என்றார்.
ஆனால்,முழுக்கதையையும் கேட்டபிறகு,‘இது அப்பா கதாபாத்திரம் மட்டும் இல்லை;தேவைப்பட்டால் தாத்தா கதாபாத்திரம்கூட மகிழ்ச்சியாக செய்வேன்’என்று சொன்னேன்.அந்தஅளவுக்கு அவர் கதையை அழகாக எழுதியிருந்தார்.
என்னுடைய கதாபாத்திரம் மட்டுமல்ல,படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் முழுமையான பயணமும், அழகான நிறைவும் இருக்கிறது.எல்லா கதாபாத்திரங்களும் மிகவும் நேர்த்தியாக எழுதப்பட்டுள்ளன.அதுதான் இந்தப்படத்தின் மிகப்பெரிய பலம்.
அதேபோல்,அந்த எழுத்து திரையிலும் மிக அழகாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.படப்பிடிப்பின்போதே இந்தப் படம் சிறப்பாக வந்திருக்கிறது என்பது எங்களுக்குத் தெரிந்தது.இது ஒரு பிரில்லியண்டான திரைப்படம். கண்டிப்பாக பாரியை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்லும் படமாக இது இருக்கும் என்று நான் நம்புகிறேன்.
பாரி மட்டுமல்ல,ரம்யா,கோபி,பரத் ஆகியோருக்கும் இந்தப்படம் மிகமுக்கியமான படமாக அமையும்.பரத் ஏற்கனவே நல்லஉயரத்தில் இருக்கிறார்;இன்னும் உயரங்களை அடையவேண்டும் என்று வாழ்த்துகிறேன். அதேபோல் ஷெல்லி பிரதரின் ஒளிப்பதிவும் இந்தப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கும்.
இந்தப்படத்தை உருவாக்கிய தயாரிப்பாளர்கள் சத்யா மேடம்,சரவணன் சார்,யுவராஜ் சார் ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றி.இந்த நிகழ்ச்சிக்கு வந்துள்ள சசி சார்,சமுத்திரக்கனி சார் மற்றும் அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.நன்றி.வணக்கம் என்றார்.
சிறப்புவிருந்தினர் நடிகர்,இயக்குநர் சமுத்திரக்கனி பேசியதாவது..,
சேத்தன் என்னுடைய நீண்டநாள் நண்பர்.திரையில் அவர் எந்தக்கதாபாத்திரத்தில் நடித்தாலும்,அதற்கு ஒரு தனித்துவமான உயிரைக் கொடுப்பார்.நடிகராக மட்டுமல்ல,ஒரு மனிதராகவும் அவர்மீது எனக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது.விடாது கருப்பு மூலம் தமிழகத்தையே கட்டிப்போட்டவர் அவர் இன்னும் பெரியஉயரம் தொடுவார்.
இயக்குநர் பாரியை பார்க்கும்போது,சினிமா மீது இருக்கும் அவரது காதலும்,அர்ப்பணிப்பும் தெளிவாக தெரிகிறது.இப்படிப்பட்ட இளம்இயக்குநர்கள்தான் தமிழ் சினிமாவுக்கு புதியகதைகளையும்,புதியபார்வைகளையும் கொண்டு வருகிறார்கள்.அவர் இந்தப்பயணத்தில் இன்னும் பெரிய உயரங்களை அடையவேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்.
‘அன்பே டயானா’ படத்தின் டிரெய்லரிலும், படக்குழுவின் பேச்சிலும் ஒரு நல்ல குடும்பப் பொழுதுபோக்கு திரைப்படத்திற்கான நேர்மறையான உணர்வு தெரிகிறது.இந்தப்படத்தில் பணியாற்றிய நடிகர்கள்,தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்.
இந்தப்படம் இரசிகர்களின் மனதை வென்று மிகப்பெரிய வெற்றி பெறவேண்டும்.பாரி மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவிற்கும் என்னுடைய அன்பும்,வாழ்த்துகளும். நன்றி என்றார்.
இயக்குநர்,தயாரிப்பாளர் சரவணன் பேசியதாவது..
அனைவருக்கும் வணக்கம்.நான் எப்படி தயாரிப்பாளர் என பலரும் கேட்டார்கள் அது யுவராஜ் கணேசனால் நடந்தது.நான் பணம் எல்லாம் போடவில்லை,பாரி மீதான அன்பில் இந்தகுழு மீதான அன்பில் இணைந்திருக்கிறேன்.
‘அன்பே டயானா’படத்தின் டிரெய்லரை பார்த்தபோது, இது முழுக்கமுழுக்க குடும்பத்துடன் இரசிக்கக்கூடிய ஒரு அழகான பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டது.
மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தொடர்ந்து நல்லகதைகளையும்,தரமான திரைப்படங்களையும் தயாரித்து வருகிறது.அந்தவரிசையில்‘அன்பேடயானா’வும் நிச்சயமாக ஒரு முக்கியமான படமாக இருக்கும்.
இயக்குநர் பாரிஇளவழகன் இந்தக்கதையை மிகுந்த அன்புடனும் நேர்மையுடனும் உருவாக்கியிருக்கிறார். படத்தில் பணியாற்றிய நடிகர்கள்,தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் அனைவரின் உழைப்பும் டிரெய்லரிலேயே தெரிகிறது.இந்தவிழாவிற்கு எனக்காக வந்ததற்கு சமுத்திரகனி மற்றும் சசிகுமார் சாருக்கு நன்றி.
இந்தப்படத்திற்கு இரசிகர்கள் மிகப்பெரிய ஆதரவு கொடுப்பார்கள் என்று நம்புகிறேன்.ஒட்டுமொத்த படக்குழுவிற்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி என்றார்.
மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் பேசியதாவது…..
அனைவருக்கும் வணக்கம்.பொதுவாக நான் மேடையில் அதிகமாக பேசமாட்டேன்.ஆனால் இந்தமேடையில் எப்படியாவது சில வார்த்தைகள் பேசவேண்டும் என்று நினைத்துத்தான் வந்திருக்கிறேன்.
ஒரு சிறியகதையைச் சொல்ல விரும்புகிறேன்.ஒரு இளைஞன் வாழ்க்கையில் எல்லாவற்றையும் இழந்துவிடுகிறான்.வேலை இல்லை,வீடு இல்லை, எதுவுமே இல்லை.தினமும் ரயில் நிலையத்தில் அமர்ந்து, தங்கள் வாழ்க்கையை நோக்கி சென்று கொண்டிருக்கும் மக்களைப் பார்த்துக்கொண்டிருப்பான்.
ஒருநாள் ஒரு வயதானபாட்டி அவனிடம் வந்து,‘இந்த டீயை குடி’என்று கொடுக்கிறார்.‘என்னிடம் பணம் இல்லை’என்று அவன் சொன்னபோது,‘நான் உன்னிடம் பணம் கேட்கவில்லை.நீ தனியாக இல்லை என்பதை உணர்த்தத்தான் இந்த டீயை வாங்கிக்கொடுத்தேன்’ என்று அந்தப்பாட்டி சொல்கிறார்.
அவன் அந்த டீயை குடிக்கிறான்.அதன் சூடு உடம்பை மட்டும் அல்ல,மனதையும் தொட்டது.மறுநாள் அந்தப்பாட்டியைத் தேடுகிறான்.அதற்குப்பிறகும் தேடுகிறான்.ஆனால் அவர் வரவில்லை.ஆனாலும், அந்த டீயின் சூடு மட்டும் அவனுடன் இருந்துகொண்டே இருந்தது.‘நீ தனியாக இல்லை…உனக்காக நிறைய பேர் இருக்கிறார்கள்’என்ற நம்பிக்கையை அது அவனுக்குக் கொடுத்தது.
என்னுடைய வாழ்க்கையிலும் என்னை இந்த இடத்துக்கு கொண்டுவந்தவர்கள் நிறையபேர் இருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் இந்தமேடையில் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
குறிப்பாக சரவணன் சாருக்கு மிகவும் நன்றி.பலநேரங்களில் நான் தடுமாறியபோது,எனக்கு துணையாக இருந்தவர் அவர்.அவர் இல்லையென்றால் நான் இன்று இந்தஇடத்தில் இருந்திருக்கமாட்டேன்.
என்னுடைய மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் குழுவினருக்கு இந்தநேரத்தில் நன்றி சொல்கிறேன்.
சரவணன் சார் எங்கள் வாழ்க்கையில் வந்த பிறகு, சுற்றியிருந்த சூழலே பாஸிடிவாக மாறியது என்று நான் நம்புகிறேன்.அவர் இருக்கும் இடத்தில் எப்போதும் ஒரு நல்லஆற்றல் இருக்கும்.
‘அன்பே டயானா’ எங்களுக்கு மிகவும் முக்கியமான திரைப்படம்.இந்தப்படம் இரசிகர்களை முழுமையாக மகிழ்விக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.. நன்றி என்றார்.
நடிகை ரம்யா ரங்கநாதன் பேசியதாவது….
அனைவருக்கும் வணக்கம்.இந்தநிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள சிறப்பு விருந்தினர்கள்,ஊடகநண்பர்கள் மற்றும் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றி.
முதலில் இயக்குநர் பாரிஇளவழகனுக்கு நன்றி சொல்ல வேண்டும்.என்னுடைய திறமையை நம்பி,‘அன்பே டயானா’ படத்தில் டயானா கதாபாத்திரத்தை எனக்கு கொடுத்தார்.இந்தக்கதாபாத்திரம் என் திரைப்பயணத்தில் எப்போதும் மிகவும் சிறப்பான ஒன்றாக இருக்கும். நீங்கள் ஒரு சிறந்த எழுத்தாளர்,திறமையான இயக்குநர், அற்புதமான நடிகர்.‘ஜமா’படத்தை பார்த்தபோதே உங்கள் திறமையை மிகவும் இரசித்தேன்.இந்தப்படத்தின் மூலம் உங்களுடன் பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியான அனுபவம்.
மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனத்திற்கும், யுவராஜ்,நரேன்,ஷார்ஜன்,மணி,நாகராஜ் சார்,விவேக் மற்றும் முழுகுழுவினருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றி.‘குட் நைட்’,‘லவ்வர்’,‘டூரிஸ்ட் ஃபேமிலி’ போன்ற தரமான படங்களின் வரிசையில் இந்தப்படத்திலும் என்னை ஒருபகுதியாக இணைத்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
நியோ கேசில் கிரியேஷன்ஸ்,Era Entertainment, ஆதிகா ப்ரோ,சரவணன் சார்,ரமணன் சார் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி.இந்தப்படத்தில் பணியாற்றியது எனக்கு மனநிறைவான அனுபவமாக இருந்தது.
ஒளிப்பதிவாளர் ஷெல்லி சார் மிகவும் திறமையானவர். அதேநேரத்தில் மிகவும் எளிமையானவர்,தொழில்முறை அணுகுமுறை கொண்டவர்.பெரம்பூரை அவர் திரையில் பதிவுசெய்திருக்கும் விதம் மிகவும் அழகாக உள்ளது. படத்தின் முதல்காட்சிகள் வெளியானபோதே அந்த விஷுவல்ஸை அனைவரும் பாராட்டியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
பரத்சங்கர் சார் இசை இந்தப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கும்.பாடல்களும்,குறிப்பாக பின்னணிஇசையும் படத்தின் உணர்வுகளை இன்னும் அழகாக எடுத்துச்செல்லும்.அவருடைய பணி உண்மையிலேயே மாயாஜாலம்போல இருக்கிறது.
ரோஜா மேடத்துடன் பணியாற்றியது எனக்கு மறக்க முடியாத அனுபவம்.சிறுவயதிலிருந்தே அவருடைய இரசிகை நான்.திரையில் மிகவும் கம்பீரமாகத் தோன்றினாலும்,நேரில் மிகவும் அன்பான,இனிமையான மனிதர்.அவருடன் நடித்த ஒவ்வொருநாளும் எனக்கு ஒரு புதியஅனுபவமாக இருந்தது.
சேத்தன் சார்,பரிதாபங்கள் கோபி மற்றும் படத்தில் நடித்துள்ள அனைத்து நடிகர்களுடனும் பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.படப்பிடிப்புதளத்தில் அனைவரும் மிகவும் அன்பாகவும் ஆதரவாகவும் இருந்தார்கள்.
இந்தப்படத்தின் புரமோஷனுக்காக கடினமாக உழைத்து வரும் PRO குழுவினர் மற்றும் அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் என்னுடைய நன்றி.குறிப்பாக வெங்கட்ரமணன் சார் மற்றும் அவருடைய குழுவினர் புதுமையான யோசனைகளுடன் இந்தப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.
‘அன்பே டயானா’ எனக்கு ஒரு நடிகையாக நிறைய உணர்வுகளை வெளிப்படுத்தும் வாய்ப்பை கொடுத்த திரைப்படம்.டயானா கதாபாத்திரத்தில் என்னால் முடிந்த அளவுக்கு முழுஅர்ப்பணிப்புடன் நடித்திருக்கிறேன். அந்த நடிப்பு இரசிகர்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன்.
இந்தப்படம் பெரம்பூரின் கலாச்சாரத்தையும்,குறிப்பாக ஆங்கிலோ-இந்திய சமூகத்தின் வாழ்க்கை முறையையும் மிகவும் அழகாக பதிவு செய்துள்ளது.அவர்கள் எவ்வளவு அன்பானவர்கள்,முன்னேற்ற சிந்தனை கொண்டவர்கள் என்பதை இந்தப்படம் சொல்லும்.
‘அன்பே டயானா’ ஒரு முழுமையான குடும்பப் பொழுதுபோக்கு திரைப்படம்.இந்தப்படத்தை அனைவரும் குடும்பத்துடன் திரையரங்குகளில் வந்து பார்த்து ஆதரவு அளிக்கவேண்டும்.நன்றி என்றார்.
இயக்குநர்,நடிகர் பாரிஇளவழகன் பேசியதாவது…..
அனைவருக்கும் வணக்கம்.இந்தமேடையில் என்னுடன் இருக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. இந்தப்படத்தின் பயணத்தில் என்னுடன் நின்ற ஒவ்வொருவருக்கும் தனிப்பட்டமுறையில் நன்றி சொல்லவேண்டும் என்று நினைக்கிறேன்.
முதலில் யுவராஜ்,நரேன் சார் மற்றும் மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் குழுவினருக்கு நன்றி.இந்தக்கதையை முழுமையாக நம்பி,நான் நினைத்தபடி உருவாக்குவதற்கு முழுசுதந்திரம் கொடுத்தார்கள்.
என்னுடைய உதவிஇயக்குநர் காலத்திலிருந்து என்னுடன் பயணித்த அனைவருக்கும் இந்தநேரத்தில் நன்றி சொல்ல விரும்புகிறேன்.மணிரத்னம் சார் பள்ளியில் கற்ற அனுபவங்களும்,என்னுடன் பணியாற்றிய உதவிஇயக்குநர்கள் மற்றும் தொழில்நுட்பக்குழுவினரின் ஒத்துழைப்பும் இந்தப்படத்தை உருவாக்க மிகவும் உதவியாக இருந்தது.
படப்பிடிப்புதளத்தில் ஒவ்வொருவரும் தங்களுடைய முழு அர்ப்பணிப்புடன் உழைத்தார்கள்.இந்தப்படத்தில் பணியாற்றிய நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக்கலைஞர்கள் அனைவரும் மிகவும் திறமையானவர்கள்.அவர்களால்தான்‘அன்பே டயானா’ இன்று இந்தவடிவத்தில் உருவாகியுள்ளது.
குறிப்பாக என் Associate Directors கார்த்திக் வீரபாகு,தினேஷ்,ராஜன் மற்றும் முழுஇயக்குநர் குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றி.இந்தப்படத்தின் பின்னால் அவர்களுடைய உழைப்பு மிகப்பெரியது.
சினிமா என்பது ஒரு கூட்டுப்பயணம்.ஒரே ஒரு மனிதரால் ஒருபடம் உருவாகாது.இந்தப்படத்தில் பணியாற்றிய ஒவ்வொருவரின் பங்களிப்பும் மிகவும் முக்கியமானது.
சேத்தன் சாருக்கு என்னுடைய சிறப்பு நன்றி.அவர் இந்தக்கதாபாத்திரத்தை ஏற்றுக்கொண்டது இந்தப்படத்திற்கு மிகப்பெரிய பலம்.அவருடன் பணியாற்றியது ஒரு மறக்கமுடியாத அனுபவம்.
போஸ்டரில்கூட அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் ரோஜா மேடம்.அந்த அம்மா கதாபாத்திரத்திற்கு அவரைத் தவிர வேறுயாரையும் என்னால் நினைத்துப்பார்க்க முடியவில்லை.அவர் இந்தப்படத்திற்கு கொடுத்த பங்களிப்பு மிகவும் முக்கியமானது.அதைவிட அவர் ஒரு மிகஇனிமையான மனிதர்.
என்னுடைய அன்புசகோதரர் பரிதாபங்கள் கோபிக்கும் என் மனமார்ந்த நன்றி.அவர் இந்தப்படத்திற்கு கொடுத்த ஆதரவும்,ஒத்துழைப்பும் அளவிட முடியாதது.படப்பிடிப்புதளத்தில் எப்போதும் ஒரு குடும்ப உறுப்பினர் போலவே இருந்தார்.அவர் கதாபாத்திரம் பெரியஅளவில் பேசப்படும்.
சுதர்சன் காந்தி மற்றும் படத்தில் நடித்துள்ள அனைத்து நடிகர்களுக்கும்,தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் என் நன்றிகள்.படப்பிடிப்புதளத்தில் அனைவரும் ஒரேகுடும்பமாக இணைந்து உழைத்ததால்தான்‘அன்பே டயானா’இன்று இந்தவடிவத்தை அடைந்துள்ளது.
இந்தமேடையில் அனைவரும் என்னைப்பற்றி நிறைய நல்லவிஷயங்களைப் பேசிவிட்டார்கள்.அதற்கு நான் தகுதியானவனாக தொடர்ந்து உழைக்கவேண்டும் என்பதே என் எண்ணம்.இந்த அன்புக்கும்,நம்பிக்கைக்கும் என் மனமார்ந்த நன்றி.
‘அன்பே டயானா’படத்தை அனைவரும் திரையரங்குகளில் பார்த்து ஆதரவு அளிக்கவேண்டும். இது பெரம்பூர் மக்கள் காலாகாலத்திற்கும் கொண்டாடும் படமாக இருக்கும் என்றார்.
இயக்குநர் சசிகுமார் பேசியதாவது..,
நான் நன்றி சொல்லவரவில்லை.வாழ்த்து சொல்லத்தான் வந்திருக்கிறேன்.‘அன்பே டயானா’திரைப்படம் மிகவும் அருமையாக உருவாகியுள்ளது.இந்தப்படத்தின் டிரெய்லர் அற்புதமாக வந்திருக்கிறது.படம் வெற்றிபெற்ற பிறகு நன்றி சொல்லுங்கள்.அதுதான் உண்மையான நன்றியாக இருக்கும்.அந்த வெற்றியை நீங்கள் அனைவரும் சேர்ந்து கொண்டாடுவீர்கள் என்பதில் எனக்கு முழுநம்பிக்கை இருக்கிறது.இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும்.
என்னுடைய நண்பர் சரவணன்,இப்போது தயாரிப்பாளராகவும் மாறி இருக்கிறார்.அவர்தான் இந்த விழாவுக்கு என்னை அழைத்தார்.இந்தப்படத்தில் அவர் பணம் முதலீடு செய்யவில்லை என்றாலும்,தனது உழைப்பை முழுமையாக முதலீடு செய்திருக்கிறார். அந்த உழைப்புக்கான பலன் அவருக்குக் கிடைக்கவேண்டும். அதற்குரிய பங்கை தயாரிப்பாளர்கள் அவருக்கு வழங்கவேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இந்தப்படத்தை இயக்கியிருப்பவர்‘ஜமா’படத்தின் மூலம் கவனம்பெற்ற பாரி.‘ஜமா’திரைப்படத்தை நான் பார்த்திருக்கிறேன்.அந்தப்படத்தில் அவரது நடிப்பும், படைப்பும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.அப்படிப்பட்ட யதார்த்தமான படத்தை உருவாக்குவது எளிதான விஷயமல்ல.அந்தப்படத்தின் மூலம் ஒரு உண்மையான படைப்பாளி என்பதை நிரூபித்த அவர்,தற்போது முழுமையான கமர்ஷியல் திரைப்படமாக‘அன்பே டயானா’வை உருவாக்கியிருக்கிறார்.இதிலும் அவர் நிச்சயம் வெற்றி பெறுவார் என்று நம்புகிறேன்.
என்னுடைய நண்பர் யுவராஜ் இந்தப்படத்தை தயாரித்திருக்கிறார்.டூரிஸ்ட் ஃபேமிலி கதை கேட்டு முடிவு செய்தவர் அவர்தான்,இந்தத்திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியைத் தேடித்தரவேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்.
இந்தப்படத்தில் நடித்துள்ள நாயகி ரம்யா,பரிதாபங்கள் கோபி உள்ளிட்ட அனைத்து நடிகர்,நடிகைகளும் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.அவர்கள் அனைவருக்கும் இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுத்தரவேண்டும்.
இந்தப்படத்தில் உழைத்த ஒவ்வொருவருக்கும் வெற்றிப்படமாக அமைய என் மனமார்ந்த வாழ்த்துகள்
இவ்வாறு அவர் பேசினார்.












