செய்திக் குறிப்புகள்

ஜீவாவின் புதியபடம் கே.குமார் தயாரிக்கிறார் – விவரம்

சூரி கதாநாயகனாக நடித்த கருடன்,மாமன் ஆகிய வெற்றிப்படங்களைத் தயாரித்த நிறுவனம் லார்க் ஸ்டூடியோஸ்.இந்நிறுவனம் இன்று, தனது அடுத்த தயாரிப்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்தத் திரைப்படத்தில் நடிகர் ஜீவா கதாநாயகனாக நடிக்கிறார்.

ஜீவா நடிப்பில் இவ்வாண்டு தொடக்கத்தில் வெளியான படம் தலைவர் தம்பி தலைமையில்.அத்திரைப்படத்தின் பெரும் வெற்றியைத் தொடர்ந்து, ஜீவா தற்போது மதுரை மண்ணின் மண்வாசனையை மையமாகக் கொண்ட ஒரு புதியகதையில் நடிக்கவுள்ளார்.

இந்தப்படத்தை,விமர்சகர்கள் மற்றும் இரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ‘கிடா’ திரைப்படத்தின் இயக்குநர் ரா.வெங்கட் இயக்குகிறார்.

மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை பின்னணியாகக் கொண்டு உருவாகும் இந்தப்படம்,அப்பா – மகன் உறவின் உணர்வுகளையும்,அவர்களுக்கிடையேயான பாசப்பிணைப்பையும் மையமாகக் கொண்டு உருவாகிறது.குடும்ப உறவுகளின் ஆழத்தையும், வாழ்க்கையின் நுணுக்கமான உணர்வுகளையும் பேசும் இந்தக்கதை,அனைத்துத் தரப்பு இரசிகர்களையும் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் ஒளிப்பதிவை பிரபல ஒளிப்பதிவாளர் எம்.சுகுமார் கவனிக்க,படத்தொகுப்புப் பணிகளை கணேஷ் சிவா மேற்கொள்கிறார். அனுபவம் மிக்க தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்புடன் உருவாகும் இந்தப்படம்,தரமான படைப்பாக அமையும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்தமாதம், மதுரை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஒரேகட்டமாக படப்பிடிப்பு நடத்தப்படவுள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் கே.குமார் சொல்கிறார்.

கதை,நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவின் வலிமையால்,இந்தப்படம் தற்போது திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.மதுரை மண்ணின் இயல்பான வாழ்க்கை முறையையும், அப்பா – மகன் உறவின் உணர்வுபூர்வமான தருணங்களையும் அழுத்தமாகப் பதிவு செய்யவிருக்கும் இந்த திரைப்படம்,ஜீவாவின் திரைப்பயணத்தில் மேலும் ஒரு முக்கியமான படைப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts