செய்திக் குறிப்புகள்

கருப்பசாமி பாடல் என் உதவியாளர் சொன்ன யோசனை – சூர்யா வெளிப்படை

மே 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் கருப்பு. சூர்​யா,இந்திரன்ஸ்,த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்தப்படத்தை ஆர்.ஜே பாலாஜி இயக்​கி​யுள்ளார். இப்​படத்தை ட்ரீம் வாரியர் பிக்​சர்ஸ் சார்பில் எஸ்​.ஆர்​.பிர​காஷ் பாபு, எஸ்​.ஆர்​.பிரபு தயாரித்​துள்ளனர்.

இப்​படம் உலகம் முழு​வதும் இது​வரை ரூ.200 கோடிக்​கும் அதிகமாக வசூலித்​துள்​ளது. இப்​படம் வெற்​றிகர​மாக ஓடிக் கொண்​டிருப்பதை அடுத்து,மே 23 அன்று செய்​தி​யாளர்​களைச் சந்​தித்து மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டா​ர் நடிகர் சூர்யா.

அப்​போது அவர் கூறிய​தாவது….

‘கருப்​பு’ படத்தில் நடிக்கவேண்டுமென அரைமணி நேரத்தில் முடிவு பண்​ணினேன்.வேறு எந்​தப்படத்​தை​யும் இவ்​வளவு விரை​வாக முடிவு பண்ணியதில்லை.ஆர்ஜே பாலாஜி கதை சொல்​லும்​போது,தியேட்​டரில் வேறுமாதிரி இருக்​கும் என்ற நம்​பிக்கை இருந்​தது. அனைத்துப் படங்​களை​யும் நம்​பிக்கை வைத்​துதான் நடிக்கிறோம்.

இந்​தப்படத்​தின் முதல்நாளி​லிருந்தே எல்​லாமே சரியாகப்போனது.அதற்கு உறு​துணை​யாக இருந்​தது,ட்ரீம் வாரியர்ஸ் பிர​காஷ்,பிரபு​தான். எல்லா முடிவு​களையும் சரி​யாக எடுத்​ததற்​கும், எடுக்க வைத்த கருப்​ப​சாமிக்​கும் நன்றி சொல்லவேண்​டும்.இது ஆசைப்​பட்ட வெற்​றி. ஆனால்,யாரும் எதிர்​பார்க்​காத பெரிய வெற்றியைக் கொடுத்த இரசிகர்​களுக்கு பெரிய நன்​றி.

இதுமாதிரி​யான ரியாக்சனை தியேட்​டரில் சமீபத்​தில் பார்த்ததே இல்​லை.பெரிய அன்பு கிடைத்​திருக்கிறது.கடவுளின் அருள்
இந்​தப்படத்​துக்கு இருக்​கிறது என்​பதை உணர்​கிறோம்.இப்படம் வெளி​யான அனைத்து இடங்​களி​லும் அதாவது தமிழ்​நாடு மட்டுமின்​றி, ஆஸ்​திரேலி​யா,இங்​கிலாந்​து,துபாய் என எங்கும் இதே ரியாக்சன் கிடைக்​கிறது என்​பதை நினைக்​கும்​போது இந்​தத் தொழில் பண்​ணுவது பிடித்​திருக்​கிறது என்று மறுபடி​யும் சொல்​லத் தோன்​றுகிறது.

எல்லாப் படங்களுக்கும் விமர்​சனம் இருக்​கும்,இதை இப்​படிப் பண்ணியிருக்​கலாம்,அப்​படி பண்​ணி​யிருக்​கலாம் என்​று.ஆனால்
எல்​லோரிடம் இருந்​தும் ஒரேமாதிரி​யான அன்​பை​யும் அவர்​களுக்கு சந்​தோசத்​தை​யும் ஒரு படம் கொடுக்​கிறது என்றால் அதற்காக நான் நன்றி சொல்லவேண்​டும்.

என்​னிடம் 28 வருடங்களாக உதவி​யாள​ராக இருக்​கும் குமார் சொன்ன ஒரு விச​யம்,படத்தைத் தாண்டி கருப்​ப​சாமிக்கு ஒரு பாடல் வைக்கவேண்​டும் என்​பது.படத்​துக்குத் தொடர்பே இல்​லாத குமாரின் ஐடி​யா​தான் அந்த கிளை​மாக்ஸ் பாடல்.மொத்தப் படத்தையும் எடிட் செய்து முடித்தபிறகு, 5 மாதங்களுக்​குப் பிறகு எடுத்​தது​தான் அப்​பாடல்.படத்​துக்கு இனி செலவு பண்ணவேண்​டாம்,இனி முடி​யாது என்று நினைத்து அந்த ஐடி​யாவை முடித்​திருக்கலாம்.ஆனால், எடுத்​து​விடலாம் என முடிவு செய்து அப்​பாடலை எடுத்​தோம்.
அதைத்​தான் இப்​போது இரசிகர்​கள் அதிகமாகப் பாராட்டுகிறார்கள்.குழந்​தைகளில் இருந்து பெரிய​வர்​கள்வரை தியேட்​டர்களில் அத்​தனை பேரும் படத்தை இரசிக்​கிறார்​கள்.

இவ்வாறு நடிகர் சூர்யா பேசினார்.

Related Posts