சினிமா செய்திகள்

விட்டுக்கொடுத்த விக்ரம் வேகமெடுத்த வேலைகள் – அடுத்தபட விவரம்

விக்ரம் நடிக்கும் அடுத்தபடம் குறித்து பல்வேறு செய்திகள் வந்து கொண்டிருந்தாலும் படப்பிடிப்பு எதுவும் தொடங்கியபாடில்லை.
அருண்விஸ்வா தயாரிப்பில் தொடங்கப்படுவதாக அறிவித்த படமும் பிரேம் இயக்கத்தில் நடிப்பதாக அறிவித்த படமும் நடக்கவில்லை.

பல் மாதங்களாக இப்படியே போய்க்கொண்டிருந்தது.இப்போது அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.

ஆம், விக்ரமின் அடுத்தபடம் முடிவாகிவிட்டது.

அரிமா நம்பி,இருமுகன் ஆகிய படங்களின் இயக்குநர் ஆனந்தசங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கிறார்.அந்தப்படத்துக்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.இந்தப்படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது.

இதுதொடர்பான பேச்சுவார்த்தைகள் சில மாதங்களாக நடந்துகொண்டிருந்தது.படத்தின் மொத்தச் செலவுத் தொகை தொடர்பாக கருத்துவேறுபாடு இருந்தது என்றும் அவை யாவும் இப்போது சரிசெய்யப்பட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியிருக்கின்றன என்றும் சொல்கிறார்கள்.

அதோடு, இப்படத்துக்கான போட்டோஷூட் எனப்படும் புகைப்படப் படப்பிடிப்பும் நடந்து முடிந்திருக்கிறது.

என்ன நடந்தது?

இப்படத்துக்கான மொத்தச் செலவுத் தொகை சுமார் அறுபதிலிருந்து அறுபத்தைந்து கோடிவரை ஆகும் என்று சொல்லியிருக்கிறார்கள்.இதில் விக்ரம் சம்பளம் மட்டும் நாற்பது கோடி மீதியில் படமெடுப்போம் என்று சொல்லியிருக்கிறார்கள்.இதை தயாரிப்பு நிறுவனம் ஏற்கவில்லையாம்.

தயாரிப்பு நிறுவனம் இந்தப்படத்துக்காக சுமார் நாற்பத்தைந்து கோடிவரை தான் செலவு செய்யமுடியும் என்று சொல்லியிருக்கிறார்கள்.

அதன்பின் பலகட்டப் பேச்சுவார்த்தைகள் நடந்து இப்போது ஐம்பது முதல் ஐம்பத்தைந்து கோடிவரை செலவு செய்ய ஒப்புக்கொண்டிருக்கிறதாம்.

தன்னுடைய சம்பளத்தால் படம் தாமதமாகிறது என்பதை அறிந்த விக்ரம்,எனக்கு இருபத்தைந்து கோடி மட்டும் கொடுங்கள்,படம் வெளியாகி இலாபம் வரும்போது மீதியைக் கொடுங்கள் என்று விட்டுக்கொடுத்தாராம்.

விக்ரம் இப்படிச் சொன்னதும் படத்தின் வேலைகள் வேகம் பிடித்துவிட்டன.

விக்ரமை வைத்து இப்போது புகைப்படப் படப்பிடிப்பு நடந்திருக்கிறது.

விக்ரமின் பிறந்தநாளான ஏப்ரல் 17 அன்று இப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.அதைத் தொடர்ந்து தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான பின்பு மே முதல்வாரத்தில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் தொடங்கியதிலிருந்து முழுமூச்சாகப் படப்பிடிப்பு நடத்திவிடுவார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

இவ்வாண்டு விக்ரம் படமே இருக்காது எனும் குறையை இந்தப்படம் போக்கிவிடுமாம்.இந்தஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் இப்படத்தை வெளியிட்டுவிடும் வேகத்தோடு வேலைகளைத் தொடங்கியிருக்கிறார்கள்.

Related Posts