செய்திக் குறிப்புகள்

குழந்தைகளும் பார்க்கும் பேய்ப்படம் – பேய்க்கதை படக்குழு உறுதி

ஜுன் மோசஸ் இயக்கத்தில் அறிமுகநடிகர் வினோத் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘பேய் கதை’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் சென்னையில் வெளியிடப்பட்டது.

இவ்விழாவில் இசையமைப்பாளர்கள் சபேஷ் – முரளி சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, படத்தின் இசை மற்றும் முன்னோட்டத்தை வெளியிட, படக்குழுவினர் பெற்று கொண்டனர்.

‘பேய் கதை’ திரைப்படத்தில் வினோத்,ஆர்யலட்சுமி, கானா பல்லவ்,சுகன்யா,ஆஷ் மெலோ,செல்வா, எலிசபெத் சுராஜ்,ஜீ.வி.மகா,மைக்கேல்,ஸ்ரீசுமந்த், ஆஷிக் பீட்டர்,ரோடஸ்,ஜீவிதா,ருச்சி பிங்க்லே உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

பிரவீண்எஸ்.ஜி.ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு போபோ சசி இசையமைத்திருக்கிறார்.

கலகலப்பும் திகிலும் நிறைந்த குதூகல திரில்லராக தயாராகி இருக்கும் இப்படத்தை ஜெர்ரி’ஸ் ஜர்னி இன்டர்நேஷனல் புரொடக்ஷன் ஹவுஸ் நிறுவனம் சார்பில் ஜெர்ரி தயாரித்திருக்கிறார்.இந்த திரைப்படத்தை தமிழகம் முழுவதும் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் சுரேஷ் வழங்குகிறார்.

ஆகஸ்ட் 29ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘பேய் கதை’ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா ஆகஸ்ட் 5 அன்று நடந்தது.

விழாவில் இயக்குநர் ஜுன் மோசஸ் பேசுகையில்…..

இப்படத்திற்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளருக்கு முதலில் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி இருக்கிறேன் என நம்புகிறேன்.
படத்தின் இசையமைப்பாளரான போபோ சசி என்னுடைய பால்யகால நண்பர்.அவரும் நானும் இணைந்து பணியாற்றி இருக்கிறோம்.இந்த விழாவிற்கு இசையமைப்பாளர்கள் சபேஷ் – முரளி அவர்களை சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்தோம்.அவர்களும் இங்கு வருகை தந்திருக்கிறார்கள்.இதற்காக அவர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்படத்தில் இணைந்து பணியாற்றிய நடிகர்கள், நடிகைகள்,தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.இப்படத்தை பார்த்து உற்சாகமடைந்து தமிழகம் முழுவதும் வெளியிடும் ஸ்ரீ தேனாண்டாள் சுரேஷூக்கும் நன்றி.
‘பேய் கதை’ கம்ப்ளீட் ஃபேமிலி என்டர்டெய்னர். திரில்லர்-காமெடி -சஸ்பென்ஸ் என ஏராளமான திரைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன.அந்த படங்களில் ரத்தம்,வன்முறை,பயங்கரம் ஆகியவை இருக்கும்.ஆனால் இந்தப்படத்தில் அவை எதுவும் இருக்காது.குழந்தைகள் கூட இந்தப்படத்தை தாராளமாகப் பார்க்கலாம்.அவர்களுக்கும் இது ஒரு திரில்லிங்கான தருணமாக இருக்கும்.இப்படத்தின் திரைக்கதையில் புதிய முயற்சிகளை செய்திருக்கிறோம். கதை சொல்லும் பாணியிலிருந்தும்,அதனை விவரிக்கும் வகையிலும்,அதில் உள்ள தொழில்நுட்ப விஷயங்கள் வரை புதிதாக முயற்சித்து இருக்கிறோம்.திரையரங்க அனுபவத்திற்காக பல விஷயங்களை புதிதாக செய்திருக்கிறோம்.படத்தில் எட்டு நிமிட அளவிற்கு வி ஆர் மோஷன் (V. R. Motion) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இருக்கிறோம்.தற்போதுள்ள குழந்தைகள் வி ஆர் மோஷன் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறார்கள். அவர்களை கவர்வதற்காக தொடர்ந்து எட்டுநிமிட அளவிற்கு இந்த தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி இருக்கிறோம்.படம் முழுவதும் எதிர்பாராத சுவாரசியமான திருப்பங்கள் இருக்கின்றன.இது இரசிகர்களை உற்சாகப்படுத்தும்.
இந்தப்படத்தில் பார்வையாளர்கள் முகம் சுழிக்கும் வகையில் எந்த காட்சியும் இடம்பெறவில்லை.சிறிய முதலீட்டில் உருவாக்கப்பட்ட நல்லதொரு முயற்சி. அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து இந்த படத்திற்கு ஆதரவு தரவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

வசனகர்த்தா நவீன் பேசுகையில்…

இந்தப்படத்திற்காக வசனம் எழுதிய அனுபவமும், அதற்கான பயணமும் வித்தியாசமாக இருந்தது.‌ இயக்குநர் என்னிடம் இரசிகர்களின் கோணத்திலிருந்து உரையாடலை எழுது என்றார்.முதல் 15 நிமிடங்களை மட்டும்தான் என்னிடம் எழுதுவதற்காக வழங்கினார்கள். பத்து நாட்கள் எடுத்துக்கொண்டு எழுதிக் கொடுத்தேன். அதன்பிறகு படத்தின் முதல்பாதி வரை எழுதிக்கொடுங்கள் என கேட்டனர்.‌அப்போதும் நான் குழம்பினேன்.அதன்பிறகு இரண்டாம்பாதி கதையை முழுவதுமாக என்னிடம் விவரித்தார்.அதைக் கேட்டவுடன் எனக்கு ஆச்சரியம் அதிகமாகி விட்டது.ஏனெனில் இந்த படத்தில் திரில்லர்,சஸ்பென்ஸ் என நிறைய விஷயங்கள் இருக்கின்றன.‌அனைவரும் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக பார்க்கும் வகையில் அமைந்திருக்கிறது.
இதுவரை தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு மட்டுமே உரையாடல்களை எழுதி வந்த எனக்கு முதன்முதலாக பெரிய திரையில் உரையாடல் எழுத வாய்ப்பு அளித்துள்ளனர்.இதற்காக இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்
என்றார்.

பாடலாசிரியர் யூகி பிரவீண் பேசுகையில்…..

2017 ஆம் ஆண்டில் வெளியான ‘அட்டு’ படத்திற்கு அனைத்துப்பாடல்களையும் எழுதி இருந்தேன்.போபோ சசி எனக்கு எல்லாப்பாடல்களையும் எழுதுவதற்கு வாய்ப்பளித்தார்.நான் இதுவரை 30 பாடல்களை எழுதி இருக்கிறேன்.இதில் 20 பாடலை போபோ சசிக்காக எழுதியிருக்கிறேன்.எங்கள் கூட்டணியில் இன்னும் ஏராளமான ஹிட் பாடல்கள் வரவேண்டும் என பிரார்த்திக்கிறேன்.இந்தப்படத்திலும் எல்லா பாடல்களையும் எழுதும் வாய்ப்பை போபோ சசி அளித்திருக்கிறார்.இதற்கு ஒப்புதல் அளித்த இயக்குநருக்கும்,தயாரிப்பாளருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

நடிகை ஆஷ் மெலோ பேசுகையில்….

கன்னடத்தில் நடிகர் துனியா விஜய் உடன் நடித்திருக்கிறேன்.தமிழில் நான் நடித்திருக்கும் முதல் படம் இது.இதற்கு வாய்ப்பளித்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். படப்பிடிப்புத்தளத்தில் அனைவரும் எனக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார்கள்.29ம் தேதி அன்று இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.அனைவரும் ஆதரவு தரவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்
என்றார்.

நடிகை எலிசபெத் பேசுகையில்….

இந்தப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பளித்த இயக்குநருக்கும்,தயாரிப்பாளருக்கும் நன்றி.இளம் திறமைசாலிகள் இணைந்து இப்படத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.இப்போது இளம் திறமைசாலிகள் பலரும் திரைப்படத்தை இயக்கி வருகிறார்கள்.எங்களைப் போன்ற மூத்தநடிகைகளை மறந்து விடுகிறார்கள். இந்தப்படத்திற்கு இசை மிக சிறப்பாக அமைந்திருக்கிறது,படமும் நன்றாக வந்திருக்கிறது, நாயகனுக்கு அம்மாவாக நடித்திருக்கிறேன்.அனைவரும் பார்த்துவிட்டு ஆதரவு தரவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

நடிகை ஜீ.வி.மகா பேசுகையில்….

இந்தப்படத்தின் மூலமாகத்தான் நான் நடிகையாக அறிமுகமாகிறேன்.இந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய இயக்குநருக்கும்,படக்குழுவினருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.இயக்குநர் என்னுடைய நண்பராக இருந்தாலும் ஆடிஷன் வைத்துத்தான் குறிப்பிட்ட கதாபாத்திரத்துக்கு என்னை தேர்வு செய்தார்.அத்துடன் எனக்கு அவர் அளித்த ஊக்கம் காரணமாகவே இப்படத்தில் நடித்திருக்கிறேன்.‌
இந்த திரைப்படம் ஏனைய பேய்பப்டங்களைப் போல் இல்லை,புதுமையான நாகரீகமான நல்லதொரு ஃபேமிலி என்டர்டெய்னராக உருவாகி இருக்கிறது.ஆகஸ்ட் 29 திரையரங்குகளில் வெளியாகிறது.அனைவரும் வருகை தந்து ஆதரவு தரவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்
என்றார்.

இசையமைப்பாளர் போபோ சசி பேசுகையில்….

வாய்ப்பளித்த தயாரிப்பாளருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.இயக்குநரும்,நானும் 25 ஆண்டு கால நண்பர்கள்.நாங்கள் இருவரும் ஏற்கனவே இணைந்து பணியாற்றி இருக்கவேண்டும்.ஆனால் அதற்கான தருணம் தற்போதுதான் அமைந்திருக்கிறது.’பேய் கதை’ படத்தை தனித்துவமாக உருவாக்கியிருக்கிறார்.தற்போதுதான் இப்படத்திற்கான பின்னணிஇசை சேர்ப்பு பணிகளை நிறைவு செய்தேன். படம் சிறப்பாக வந்திருக்கிறது,பாடல்களும் சிறப்பாக இருக்கின்றன என்றார்.

இசையமைப்பாளர் சபேஷ் பேசுகையில்…..

படத்தின் முன்னோட்டத்தைப் பார்க்கும்போது இயக்குநர் எதையோ புதுமையாக செய்திருக்கிறார் என்ற எதிர்பார்ப்பு எழுகிறது.படம் சிறப்பாக இருக்கிறது. இந்தவிழாவிற்கு அழைப்பு விடுப்பதற்காக இயக்குநர் எங்களை சந்தித்தார்.அப்போது நான் உங்களை பார்த்திருக்கிறேன் என அவர் கூறினார் அப்போது அவரிடம் நாங்கள் வருடத்திற்கு 25 திரைப்படங்களில் பணியாற்றினோம்.அப்போது கழுத்தை திருப்பி பக்கத்தில் யார் இருக்கிறார்கள் என்று பார்ப்பதற்கு கூட நேரம் இருக்காது.எங்கள் பார்வை முழுவதும் திரையிலும், கீ போர்டிலும்தான் இருக்கும் என்று விளக்கம் அளித்தேன்.
எங்கள் குடும்பத்தை சேர்ந்த இசையமைப்பாளர் போபோ சசி இதில் பணியாற்றி இருக்கிறார்.தற்போதெல்லாம் ஒரு பாடல் நிலைத்து நிற்கிறது என்றால் அது வெஸ்டர்ன் பாணியிலான பாடலாக இருந்தாலும் அதில் சிறிதளவு மெலோடி இடம்பெற்றிருக்க வேண்டும். மெலோடி இருந்தால்தான் அந்தப்பாடல் ஹிட் ஆகும். இது நூறு சதவீதம் போபோ சசி பாடல்களில் இருக்கிறது.அதனால் இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெறும் என்றார்.

இசையமைப்பாளர் முரளி பேசுகையில்……

இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியை பெறும் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது.படத்தின் முன்னோட்டத்தை பார்க்கும் போது இசையும், ஒளிப்பதிவும் சிறப்பாக இருக்கிறது.இந்த திரைப்படம் ஹாலிவுட் தரத்தில் இருக்கிறது.அதற்கு ஏற்றாற் போல் பின்னணி இசையும்,பாடல்களும் அமைந்திருக்கின்றன.
இயக்குநர் ஜுன் மோசஸை சிறிய வயதில் இருந்தே பார்த்திருக்கிறேன்.அவர் எப்போதும் எங்களுடைய வீட்டில் போபோ சசியுடன்தான் இருப்பார்.இந்த இருவரும் சின்னவயதிலிருந்து எதையாவது செய்து கொண்டே இருப்பார்கள்.அதனால்தான் தற்போது இருவரும் திரையில் ஜொலிக்கிறார்கள்.இந்தப்படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள் என்றார்.

நாயகன் வினோத் பேசுகையில்…..

இந்தத் திரைப்படத்தில் பணியாற்றிய நடிகர்கள், நடிகைகள்,தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் இசையமைப்பாளர்கள் சபேஷ் – முரளியின் இரசிகன்.ஏனெனில் ‘வாலி’ படத்திற்கு பின்னணி இசையமைத்தது இவர்கள்தான்.அவர்கள் இங்கு சிறப்பு விருந்தினராக வருகைதந்து வாழ்த்தியமைக்கு நன்றி.
இந்த திரைப்படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடும் ஸ்ரீ தேனாண்டாள் சுரேஷுக்கும் நன்றி.அவருடன் தொடர்ந்து பயணிக்க விரும்புகிறேன்.
இயக்குநர் ஜுன்மோசஸ் என்னுடைய நண்பர்தான். நானும் அவரும் பிசினஸ் பார்ட்னர்ஸ்.ஒருநாள் சாதாரணமாக பேசிக்கொண்டிருக்கும்போது திரைப்படங்களில் நடிக்கவேண்டும் என்ற என் விருப்பத்தை சொன்னவுடன் அவர் ஒருவரியில் கதையை சொன்னார்.‌அதன்பிறகு அதனை விரிவுபடுத்தி பணியாற்றத் தொடங்கி அந்தப்பணி தற்போது இங்குவரை வந்திருக்கிறது.அவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.அவருடைய எதிர்காலம் சிறப்பாக இருக்கவேண்டும் என வாழ்த்துகிறேன்.
நான் கார்ப்பரேட் நிறுவனத்தில் 22 ஆண்டு காலம் பணியாற்றி இருக்கிறேன்.அங்கு கற்றுக்கொள்ளாத பல விஷயங்களை சினிமாவில் ஒரேவருடத்தில் கற்றுக்கொண்டேன்.
‘பேய் கதை’ திரைப்படம் 29 ஆம் தேதி அன்று வெளியாகிறது.ஊடகங்களும்,இரசிகர்களும் ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்

இவ்வாறு அவர் பேசினார்.

Related Posts