சினிமா செய்திகள்

மெர்சல் நட்டத்துக்கு அட்லியே காரணம் – தயாரிப்பாளர் கருத்தால் பரபரப்பு

திரைப்படத்துறை சந்திக்கும் பல்வேறு சிக்கல்களைக் களைய வேண்டும் என்பதற்காக வேலைநிறுத்தம் நடந்துகொண்டிருக்கிறது.

இந்த வேலைநிறுத்தக்காலத்துக்குள் பல்வேறு புதிய சிக்கல்கள் உருவாகிவிடும் போலிருக்கிறது.

இந்த வேலைநிறுத்தம் தொடர்பாக ஒரு தனியார் நிகழ்ச்சியில் தயாரிப்பாளர்கள் சங்கப் பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு, தயாரிப்பாளர்கள் டி.சிவா, எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன், ஒய்நாட் சசி ஆகியோர் கலந்துகொண்ட விவாதம் ஒன்று நடைபெற்றது.

அவ்விவாதத்தில் பல்வேறு சிக்கல்கள் பற்றிப் பேசினார்கள்.

அப்போது பேசிய டி.சிவா, நான் வெளிப்படையாகப் பேசுகிறேன், மெர்சல் படத்தின் தோல்விக்கு என்ன காரணம்? இயக்குநர் அட்லீதான் கர்ரணம். எந்த பிளானும் இல்லாமல் படமெடுக்கப் போய் பட்ஜெட்டை மிகவும் அதிகமாக்கிவிட்டார். இதனால்தான் அந்தப்படம் தோல்வி அடைந்தது. அதனால், அட்லீக்கு இனிமேல் யாரும் படக் கொடுக்கக்கூடாது என்று பேசினார்.

அவருடைய இந்தக் கருத்துக்குப் பரவலான வரவேற்பு கிடைத்திருக்கிறது.

அதேசமயம் இயக்குநர் அட்லி கொதித்துவிட்டாராம். அங்கு என்ன நடந்தது என்று அவருக்குத் தெரியுமா? அந்தப்படத்துக்கான என் சம்பளத்தில் கொஞ்சத்தை விட்டுக்கொடுத்துள்ளேன். என்னைப் பற்றி அவர் எப்படி பேசலாம், எனவே அவர் மேல் வழக்குத் தொடுக்கப் போகிறேன் என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லிக்கொண்டிருக்கிறாராம்.

அவர் சொன்னபடி செய்தால் பரபரப்புக்குப் பஞ்சமிருக்காது.

Related Posts